மாலத்தீவில் காதலியுடன் கும்மாளம் போடும் பிரபல தமிழ் நடிகர்.. மரண பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிரபல நடிகரான விஷ்ணு விஷால் தனது காதலியுடன் மாலத்தீவில் ஜாலி பண்ணும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
பிரபல நடிகரான விஷ்ணு விஷால், தற்போது காடன், ஆரண்யா, ஜகஜால கில்லாடி, எஃப் ஐ ஆர், மோகன்தாஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
விஷ்ணு விஷால் தன்னுடன் கல்லூரியில் படித்த ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்தார்.

பார்ட்டிகளில் நெருக்கம்
இதனை தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கணையான ஜூவாலா கட்டாவுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் இரவு பார்ட்டிகளில் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் வெளியானது.

வைரலான போட்டோக்கள்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜூவாலா கட்டாவின் பிறந்த நாளில் இருவரும் மோதிரம் மாற்றி தங்களின் நிச்சயதார்தத்தை முடித்துக் கொண்டனர். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

காதலி எங்கே?
இந்நிலையில் விஷ்ணு விஷால் மாலத்தீவில் விடுமுறையை கொண்டாடி வருவதாக சில போட்டோக்களை ஷேர் செய்தார். அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் தனியாகவா சென்றிருக்கிறீர்கள்? உங்கள் காதலி வரவில்லையா என்று கேட்டிருந்தனர்.

காதலியுடன் செல்பி
இந்நிலையில் தனது காதலி தன்னுடன்தான் மாலத்தீவில் இருக்கிறார் என்று கூறும் வகையில் ஜூவாலா கட்டாவுடன் எடுத்த செல்பி ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் விஷ்ணு விஷால்.

தலையில் கார குழம்பு
இதில் விஷ்ணு விஷாலுக்கு பின்னால் நிற்கிறார் ஜூவாலா கட்டா. இதனை பார்த்த நெட்டிசன்கள், ஜூவாலா கட்டாவின் ஹேர் கலரிங்கை பார்த்து மரண கலாய் கலாய்த்துள்ளனர். அவரது தலையில் ஏன் கார குழம்பை ஊற்றி வைத்துள்ளார் என கிண்டலடித்துள்ளனர். இன்னும் சிலர் காதலியுடன் ஜாலியா என்றும் பங்கம் செய்துள்ளனர்.
இன்னும் சிலர் காதலியுடன் ஜாலியா என்றும் பங்கம் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











