எது விவாகரத்தா..? கடுப்பான விஷ்ணு விஷால்... மீண்டும் டிவிட்டரில் விளக்கம்!
சென்னை: விஷ்ணு விஷால் தற்போது ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் விஷ்ணு விஷால் மிகவும் விரக்தியாக ட்வீட் செய்திருந்தார்.
இதனால், அவர் தனது மனைவி ஜுவாலா கட்டாவை விவாகரத்து செய்யவுள்ளாரா என்ற கேள்விகள் எழுந்தன.
இதனையடுத்து மீண்டும் டிவிட்டரில் வந்த விஷ்ணு விஷால் தனது முந்தைய பதிவு குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

விஷ்ணு விஷால் விரக்தி
கோலிவுட்டின் மிக முக்கியமான நடிகரான விஷ்ணு விஷால், அடுத்தடுத்து சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ரொம்பவே விரக்தியாக ட்வீட் செய்திருந்தார். அதில் அவர், "Its ok, I tried again, I failed again, I learnt again" என குறிப்பிட்டு இருந்தார். அதாவது இதுபோதும், மீண்டும் சோர்ந்துவிட்டேன், மீண்டும் தோற்றுவிட்டேன், மீண்டும் கற்றுக்கொண்டேன்" என பதிவிட்டிருந்தார். மேலும், "இதுவே கடைசி தோல்வியாக இருக்கட்டும், ஆனாலும் இது துரோகம், ஏமாற்றம் தான்" எனவும் குறிப்பிட்டிருந்தார்.

ஜுவாலா கட்டாவுடன் விவாகரத்து
இந்த டிவிட்டர் பதிவைப் பார்த்த ரசிகர்கள், லால் சலாம் படத்தில் இருந்து விஷ்ணு விஷால் விலகிவிட்டாரா என கமெண்ட்ஸ் செய்துவந்தனர். இன்னொருபக்கம் தனது இரண்டாவது மனைவி ஜுவாலா கட்டாவை விவாகரத்து செய்யப்போகிறார் என தகவல் வெளியானது. திருமணமாகி 2 ஆண்டுகள் கூட முடியாத நிலையில், விஷ்ணு விஷாலும் ஜுவாலா கட்டாவும் விவாகரத்து செய்துகொள்வதாக வெளியான தகவல் ரொம்பவே வைரலானது. இதனால் உடனடியாக தனது டிவிட்டர் பதிவை டெலிட் செய்தார் விஷ்ணு விஷால்.

மீண்டும் டிவிட்டரில் விளக்கம்
இந்த டிவிட்டர் பதிவு தவறாக புரிந்துகொள்ளப்பட்டது குறித்து விஷ்ணு விஷால் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், "என்னுடைய ப்ரொபஷனல் வாழ்க்கையை பற்றி தான் அந்த டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். ஆனால், அதற்குள் விவாகரத்து என செய்தி போட்டுவிட்டார்கள். ஒருவருக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய கிஃப்ட் நம்பிக்கை. ஆனால், தோற்கும் போது நாம் நம்மையே குறை சொல்கிறோம். அவ்வளவு கடினமாக இருக்க தேவையில்லை. நான் இதைதான் டிவிட்டரில் சொல்லவந்தேன். ஆனால் அதற்குள் விவாகரத்து என்று செய்தி வந்துவிட்டது என டிவீட் செய்துள்ளார்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
விஷ்ணு விஷாலுக்கும் அவரது முன்னாள் மனைவி ரஜினிக்கும் 2018ம் ஆண்டு விவாகரத்து ஆனது. இதனைத் தொடர்ந்து பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை திருமணம் செய்துகொண்டார். கடந்த 2021ம் ஆண்டு தான் இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் அதற்குள் விவாகரத்து என செய்திகள் வெளியானது. இதனையடுத்து தற்போது ஜுவாலா கட்டாவை விவாகரத்து செய்வதாக வெளியான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

விரைவில் லால் சலாம் ஷூட்டிங்
இந்நிலையில், விஷ்ணு விஷால் விரைவில் லால் சலாம் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கிரிக்கெட் வீரர்களாக நடிக்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











