Gatta Kusthi 2 Box Office: நெகடிவ் விமர்சனம் ஒர்க் ஆகல.. கட்டா குஸ்தி 2 அதிகாரப்பூர்வ வசூலைப் பாருங்க
சென்னை: இயக்குநர் செல்ல அய்யாவு இயக்கத்தில் உருவாகி ஏற்கனவே வெளியான படம் கட்டா குஸ்தி. இந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. இதை அடுத்து இந்த படத்தின் இரண்டாவது பாகம் கடந்த 3ஆம் தேதி வெளியானது. படத்தில் கதாநாயகனாக நடித்து தயாரித்துள்ளார் விஷ்ணு விஷால். படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, மோக்ஷா, கருணாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலிலும் சக்கைப் போடு போட்டு வருகிறது. அதாவது படம் முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூபாய் 22 கோடிகள் வசூலித்துள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் புரோமோசனின் போது முதலமைச்சர் விஜய் குறித்து பேசுகையில் விஷ்ணு விஷால் குறிப்பிட்டது, விஜய் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியது. இதனால் விஜய் ரசிகர்கள் படம் குறித்து நெகடிவ் விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். திட்டமிட்டு பகிரப்பட்ட நெகடிவ் விமர்சங்கள் ஒர்க் -அவுட் ஆகவில்லை என்பதை படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் உறுதிப்படுத்தி உள்ளது.



Click it and Unblock the Notifications