தனது புகைப்படத்தை வைத்து மோசடி செய்த ஸ்னாப் டீல்.. கொந்தளித்த விஷ்ணு விஷால் !

சென்னை : இந்தியாவில் மிகவும் பிரபலமான ஸ்னாப்டீல் பெயரில் ஒரு போலி நிறுவனம் தனது புகைப்படத்தை வைத்து மோசடி செய்துள்ளதாக விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Vikram 60 • Combo Treat | Karthick Subburaj • Chiyan Vikram, Dhruv Vikram

தமிழில் முண்டாசுப்பட்டி என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமான விஷ்ணு விஷால் தற்போது எப்ஐஆர் மற்றும் காடான் போன்ற படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இவரது இரண்டு படங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ரசிகர்கள் அனைவரும் இவரது படங்களை திரையில் பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

முன்னணி கதாநாயகன்

முன்னணி கதாநாயகன்

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என தமிழ் திரைப்படத் துறையில் வெற்றிகரமாக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிகுழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் தற்பொழுது பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி கதாநாயகனாக வளர்ந்து வருகிறார்.

கால் முறிவு

கால் முறிவு

கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த விஷ்ணு விஷால் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பல போட்டிகளில் கலந்துகொண்டு வந்துள்ளார். எதிர்காலத்தில் மிகப்பெரிய கிரிக்கெட் விளையாட்டு வீரராக இந்தியாவில் வலம் வர நினைத்த இவருக்கு ஏற்பட்ட எதிர்பாராத கால் முறிவு காரணமாக தனது பாதையை சினிமாவிற்கு திருப்பிக் கொண்டார்.

எதர்ச்சியாக

எதர்ச்சியாக

இவ்வாறு எதர்ச்சியாக சினிமாவிற்குள் வந்த விஷ்ணு விஷால் தற்போது வெற்றிகரமாக பல படங்களை தயாரித்தும் நடித்தும் வருகிறார். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் முண்டாசுப்பட்டி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது.

அறிமுக இயக்குனர்

அறிமுக இயக்குனர்

அறிமுக இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் உருவான இந்த படம் காதல் மற்றும் காமெடி கலந்த படமாக 80 மற்றும் 90களில் நடப்பது போல வித்தியாசமான கதையில் உருவான இப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்தது. முண்டாசுபட்டி தொடர்ந்து இவர் நடித்த அனைத்து படங்களும் தொடர்ந்து வெற்றியை பெற்று வர மீண்டும் முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம் குமாருடன் விஷ்ணு விஷால் இரண்டாவது முறையாக இணைந்தார்.

சைக்கோ கொலைகாரன்

சைக்கோ கொலைகாரன்

முதல் படத்தில் காமெடிக் கதையில் கலக்கி இருந்த ராம்குமார் இந்த முறை சைக்கோ கொலைகாரனை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ராட்சசன் திரைப்படம் விஷ்ணு விஷால் திரைப்பட வாழ்க்கையில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. வெளியான அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பு பெற்று வசூலை வாரிக் குவித்த ராட்சசன் சமீபத்தில் தெலுங்கில் ராட்சசடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

மோசடி

மோசடி

வெற்றி நாயகனாக வளர்ந்து வரும் விஷ்ணு விஷால் சமீபத்தில் அவரது அப்பாவிற்கு முடிவெட்டி அழகு பார்த்தார். இந்நிலையில் தற்போது ட்விட்டர் பக்கத்தில் வேதனையுடன் ஒரு பதிவை போட்டிருந்தார். அந்த பதிவில் ஸ்னாப்டீல் பெயரில் ஒரு போலி நிறுவனம் தனது புகைப்படத்தை வைத்து மோசடி செய்து வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

லக்கிட்ரா 2020

லக்கிட்ரா 2020

ஸ்னாப்டீல் பெயரில் ஒரு போலி நிறுவனம் சமீபத்தில் ஸ்னாப்டீல் லக்கிட்ரா 2020 என்ற பெயரில் ஒரு போட்டி ஒன்றை நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு கார் மற்றும் பைக் பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்பொழுது அந்த போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தது.

அதிர்ந்து போன

அதிர்ந்து போன

வெளியிடப்பட்ட வெற்றியாளர்களின் பட்டியலில் சஞ்சீவ் சுக்லா என்ற பெயரில் விஷ்ணு விஷாலின் புகைப்படத்தை போட்டு இவர் இந்த போட்டியின் மூலம் காரை பரிசாக வென்றிருக்கிறார் என அந்த போலி நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ந்து போன விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனைப் பற்றி பகிர்ந்து தனது வேதனையை வெளிப்படுத்தி இருந்தார். அந்த போலி ஸ்னாப்டீல் நிறுவனத்தை பொறுத்தவரையில் என்னுடைய பெயர் சஞ்சீவ் சுக்லா, நான் லக்கிட்ரா போட்டியின் மூலம் வெற்றி பெற்று காரை பரிசாக வென்றிருக்கிறேன் என வேடிக்கையுடனும் ஆதங்கத்துடன் அந்த நிறுவனத்தை கேட்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X