குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டாரா? குடியிருப்புவாசிகள் புகார்.. நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்!

By

சென்னை: தான் குடித்துவிட்டு தகராறு செய்ததாக கொடுத்துள்ள புகாரை, நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

சென்னை: குடியிருப்பில் குடித்துவிட்டு கும்மாளம்.. பிரபல நடிகர் மீது போலீசில் புகார்..!

தமிழில், சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால்.

அடுத்து பலே பாண்டியா, குள்ளநரிக் கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

ரகளையில் ஈடுபட்டார்

ரகளையில் ஈடுபட்டார்

தற்போது எப்.ஐ.ஆர். படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இந்நிலையில் குடிபோதையில் நடிகர் விஷ்ணு விஷால் ரகளையில் ஈடுபட்டதாக, கோட்டூர்புரத்தில் அவர் வசிக்கும் அபார்ட்மென்ட்டில் உள்ள சக குடியிருப்புவாசிகள், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

கதவைத் திறக்கலை

கதவைத் திறக்கலை

அதில், கடந்த 23 ஆம் தேதி நள்ளிரவில் இரண்டாவது மாடியிலிருந்த இரண்டு வீடுகளில் இருந்து இரைச்சலாக பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. இதனால் தூக்கத்திலிருந்து விழித்தோம். அந்த வீட்டிலிருந்த விஷ்ணு விஷால் மற்றும் அவரது நண்பர்களை அழைக்க சென்றேன். அவர்கள் கதவைத் திறக்கவில்லை.

இரைச்சல் நிற்கவில்லை

இரைச்சல் நிற்கவில்லை

அபார்ட்மென்ட்டின் காவலரைச் சென்று பார்க்கச் சொன்னேன். அவர் கேட்டபோது கதவு திறந்து பதில் சொல்லப்பட்டாலும் இரைச்சல் நிற்கவில்லை. இதனால் காவல்துறையிடம் புகார் செய்தேன். அவர்கள் வந்த பிறகு இதுகுறித்துப் பேச நான் இரண்டாவது மாடிக்குச் சென்றேன்.

அசிங்கமாகப் பேசினார்

அசிங்கமாகப் பேசினார்

அப்போது விஷ்ணு விஷால் அதிக குடிபோதையில் அசிங்கமாகப் பேசினார். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதற்கு முன்னரே இதுகுறித்து அந்த வீட்டின் உரிமையாளரிடம் புகார் அளித்துள்ளோம். முதியவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் என பலர் குடுயிருப்பில் வசித்து வரும் நிலையில், விஷ்ணு விஷாலின் செயல் தொந்தரவு அளிப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்ஸ்பேக் வராது

சிக்ஸ்பேக் வராது

இது குறித்து நடிகர் விஷ்ணு விஷால் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில், 'தினமும் குடித்துக் கொண்டிருந்தால் சிக்ஸ் பேக் வந்துவிடாது. நீங்கள் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டும். நீண்ட நாட்களுக்கு குடிப்பதில் இருந்து தள்ளி இருக்க வேண்டும். சிலருக்கு இதன் பின்னால் இருக்கும் லாஜிக் புரிவதில்லை' என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X