ஐஸ்வர்யா படத்தில் இருந்து விலகுகிறாரா விஷ்ணு விஷால்..? அடுத்தடுத்து அவுட் ஆகும் லால் சலாம் டீம்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார்.
லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் மியூசிக் கம்போஸ் செய்கிறார்.
லால் சலாம் ஷூட்டிங் இன்னும் தொடங்காத நிலையில், இந்தப் படத்தின் ஹீரோக்களில் ஒருவரான விஷ்ணு விஷால் விலகுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஐஸ்வர்யாவின் லால் சலாம்
நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்து லைகா தயாரிப்பில் இரண்டு படங்களில் கமிட் ஆகியுள்ளார். அதில், ஒரு படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் குறித்த அபிஸியல் அப்டேட்டை டைட்டில் ப்ரோமோவுடன் லைகா நிறுவனம் வெளியிட்டது. அதன்படி லால் சலாம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார், விஷ்ணு விஷால், விக்ராந்த் லீடிங் ரோலில் நடிக்கின்றனர்.

ஷூட்டிங் தொடங்கும் முன் சிக்கல்
லால் சலாம் திரைப்படம் கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து உருவாகவுள்ளது. அதன் காரணமாகவே கிரிக்கெட் வீரர்களான விஷ்ணு விஷாலையும் விக்ராந்தையும் லீடிங் ரோலில் நடிக்க வைக்க ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். ரஜினிகாந்த் இதில் ஒரு பவர்ஃபுல்லான கேமியோ ரோலில் மட்டுமே நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்பே சில சிக்கல்கள் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விலகிய பிரபலம்
லால் சலாம் படத்தின் இசை வேலைகளை ஏஆர் ரஹ்மான் ஏற்கனவே தொடங்கிவிட்டார். ஐஸ்வர்யாவும் ஏஆர் ரஹ்மானும் ட்யூன் செலக்ட் செய்யும் வீடியோ வெளியாகி வைரலானது. இதனால் விரைவில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்பட்டது. விஷ்ணு விஷால், விக்ராந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் முதலில் படமாக்கப்பட உள்ளதாம். அதன் பின்னரே ரஜினி நடிக்கும் சீன்ஸ் எடுக்கப்படும் என சொல்லப்படுகிறது. இதனிடையே தான் இந்தப் படத்தின் காஸ்ட்யூம் டிசைனராக கமிட் ஆன பூர்ணிமா ராமசாமி திடீரென விலகினார்.

விலகுகிறாரா விஷ்ணு விஷால்?
மாற்ற முடியாத கருத்து வேறுபாடுகள் காரணமாக லால் சலாம் படத்தில் இருந்து ப்ரீ புரொடக்ஷன் கட்டத்தின் போதே விலகிக்கொள்கிறேன். இனி லால் சலாம் படத்தின் அனைத்து போஸ்டர்களில் இருந்தும் தனது பெயரை நீக்க வேண்டும் என பூர்ணிமா ட்வீட் செய்திருந்தார். இதுவே மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது விஷ்ணு விஷாலும் விலகுவதாகக் கூறப்படுகிறது. கட்டாகுஸ்தி வெற்றிக்குப் பின்னர் அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் தேடி வருகின்றன.

விரைவில் அபிஸியல் அப்டேட்
லால் சலாம் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை என்பதால், விஷ்ணு விலகுவதாக சொல்லப்பட்டது. அதேநேரம் தனுஷ் இயக்கும் படத்திலும் விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளதால், லால் சலாம் படத்தில் இருந்து அவர் விலக அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், இதுகுறித்து லால் சலாம் படக்குழு தரப்பில் இருந்தோ அல்லது விஷ்ணு விஷாலோ இதுவரை எந்த அப்டேட்டும் கொடுக்கவில்லை. மேலும், இது பொய்யான தகவல் என்றும், விரைவில் லால் சலாம் ஷூட்டிங் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. ஆனாலும் மகளுக்காக லால் சலாம் படத்தில் கமிட்டான ரஜினி, கொஞ்சம் டென்ஷனாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











