Vishnu Vishal - அதுமட்டும் நடந்திருந்தா எப்படி இருந்திருக்கும்?.. உச்சக்கட்ட விரக்தியில் விஷ்ணு விஷால்

சென்னை: Vishnu Vishal (விஷ்ணு விஷால்) தமிழில் நல்ல நடிகர் என்று பெயர் எடுத்திருக்கும் விஷ்ணு விஷால் உச்சக்கட்ட விரக்தியில் ஒரு விஷயத்தை பேசியிருக்கிறார்.

சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு மூலம் நடிகராக அறிமுகமானார் விஷ்ணு விஷால். முதல் படம் மெகா ஹிட்டானது. படம் ஹிட்டானது மட்டுமின்றி விஷ்ணு விஷால் நல்ல நடிகர் என்ற பெயரையும் பெற்றார். அதற்கு அடுத்ததாக பலே பாண்டியா, துரோகி, குள்ளநரிக்கூட்டம், இன்று நேற்று நாளை , நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

Vishnu Vishal is the First Choice to Act in Naan Mahaan Alla Movie

சிறந்த நடிகர்: அவர் நடித்த ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் வெளியானது. இதனால் அவரது கதை தேர்வு அபாரமாக இருப்பதாக இண்டஸ்ட்ரியில் பேச்சு எழுந்தது. குறிப்பாக சீனு ராமசாமி இயக்கிய் நீர்ப்பறவை படத்தில் விஷ்ணு விஷாலின் நடிப்பை பாராட்டதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். இருந்தாலும் அந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. இருப்பினும் மனம் தளராத விஷ்ணு விஷால் தனது கரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

இன்று நேற்று நாளை: பெரும் திருப்புமுனைக்காக காத்திருந்த அவருக்கு முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை படங்கள் அமைந்தன. இரண்டு படங்களும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனையடுத்து உற்சாகம் கூடிய விஷ்ணு விஷால் ஜீவா, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், மாவீரன் கிட்டு என வித்தியாச வித்தியாசமாக நடித்தார்.

ராட்சசன்: விஷ்ணு விஷாலின் கரியரிலேயே முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்தது ராட்சசன். முண்டாசுப்பட்டி இயக்குநர் ராம்குமார் இயக்கியிருந்த அந்தப் படம் த்ரில்லர் ஜானரில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. அவரது மேக்கிங்கும், விஷ்ணு விஷாலின் நடிப்பும் அட்டகாசமாக இருந்தது. மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து ராட்சசன் 2வை கொடுக்கப்போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியானது.

லால் சலாம்: விஷ்ணு விஷால் இப்போது லால் சலாம் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடிப்படையில் விஷ்ணு விஷால் சிறந்த கிரிக்கெட் வீரர் ஆவார். லால் சலாம் படமும் கிரிக்கெட்டை மையப்படுத்திதான் எடுக்கப்பட்டுள்ளது. அவர் கிரிக்கெட்டராக ஏற்கனவே நடித்திருந்த ஜீவா படம் எப்படி நல்ல பெயர் பெற்றதோ அதேபோல் லால் சலாமும் நல்ல பெயரை பெறும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார். படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியிருக்கிறார். ரஜினியும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்.

விரக்தியில் விஷ்ணு: இந்நிலையி விஷ்ணு விஷால் விரக்தியோடு ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார். நான் மகான் அல்ல படம் குறித்து பேசியிருக்கும் அவர், "நான் மகான் அல்ல எனக்கு ரொம்பவே பிடித்த படம். அதுதான் எனக்கு இரண்டாவது படமாக இருந்திருக்க வேண்டியது. அனைத்தும் இறுதியான சமயத்தில் விதி வேறு திட்டம் வைத்திருந்தது. அதுமட்டும் எனது இரண்டாவது படமாக அமைந்திருந்தால் எப்படி இருந்திருக்குமென அடிக்கடி நினைத்துக்கொள்வேன்" என தெரிவித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X