இவருக்காகவா மனைவியை பிரிந்தீர்கள்?: விஷ்ணு விஷாலை கேட்கும் ரசிகர்கள்
Recommended Video
சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் இதற்காகத் தான் மனைவியை பிரிந்தீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
நடிகர் விஷ்ணு விஷாலும் அவரின் காதல் மனைவி ரஜினி நட்ராஜும் பிரிந்துவிட்டனர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் பிரிந்து வாழ்வதே சரி என்று முடிவு செய்து விவாகரத்து பெற்றனர்.
பிரிந்து வாழ்ந்தாலும் மகன் ஆர்யனுக்காக இருவரும் நல்ல நண்பர்களாக உள்ளனர். விஷ்ணு விஷாலுக்கு ஆர்யன் என்றால் உயிர். தானும், மனைவியும் பிரிந்ததற்கான காரணத்தை விஷ்ணு விஷால் சமூக வலைதளத்தில் தெரிவித்தார். அவர் தற்போது படங்களில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார்.
விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் சேர்ந்து எடுத்த இரண்டு செல்ஃபிக்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். விஷ்ணுவும், ஜுவாலாவும் நல்ல நண்பர்கள் ஆவார்கள். அதனால் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டார். ஆனால் அதை பார்த்த நெட்டிசன்கள் ஏதேதோ பேசத் துவங்கிவிட்டனர்.
காதலியா?
ஜுவாலாவுடன் விஷ்ணு விஷால் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், இவருக்காகத் தான் உங்களின் அன்பான மனைவியை பிரிந்தீர்களா?. இவரை தான் திருமணம் செய்யப் போகிறீர்களா?. அதனால் தான் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளீர்களா என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பியுள்ளனர். இது அவரின் சொந்த விஷயம் என்பதை மறந்து நெட்டிசன்கள் அவரிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அஸ்வின் ரவிச்சந்திரன்
விஷ்ணு விஷாலின் ட்வீட்டை பார்த்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரனோ, வாழ்க்கை வரலாற்று படமா என்று கேட்டார். அவரின் கமெண்ட்டை பார்த்த ஜுவாலா கட்டாவோ, நான் நடிகை இல்லை அஸ்வின் என்று பதில் அளித்துள்ளார்.
அழகு
ஏதாவது தமிழ் படத்தில் ஜுவாலா உங்களுடன் சேர்ந்து நடிக்கிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சிலரோ உங்களின் ஜோடி சூப்பர் சார். பார்க்க அழகாக உள்ளது. சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று வாழ்த்தியுள்ளனர். ஜுவாலா விஷ்ணுவின் தோழி தான். ஆனால் நெட்டிசன்களாக ஒரு முடிவுக்கு வந்து வாழ்த்துகிறார்கள்.


Click it and Unblock the Notifications











