கும்கி 2... ஜீவிதா மகளுக்கு ஜோடியாகும் விஷ்ணு விஷால்?
கும்கியின் இரண்டாம் பாகத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: பிரபுசாலமன் இயக்கி வரும் கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2012-ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு - லக்ஷ்மி மேனன் நடிப்பில் வெளியான படம் 'கும்கி'. வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதனையும் பிரபு சாலமனே இயக்குகிறார்.

நாயகனின் பிளாஷ்பேக் காட்சிகள் கடந்தாண்டு தாய்லாந்தில் படமாக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடந்து வருகிறது. அதில் விஷ்ணு விஷால் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இப்படத்தின் நாயகன் விஷ்ணு விஷால் தான் என நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில், நட்சத்திர தம்பதி ராஜசேகர் - ஜீவிதாவின் மகள் ஷிவானி நாயகியாக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











