பிரபு சாலமன் இயக்கும் காடன்... நடிகர் ராணா லுக் ஓகே... யானை பாகன் மாறன் லுக்கை கவனிச்சீங்களா?
Recommended Video
சென்னை: பிரபு சாலமன் இயக்கும் 'காடன்' படத்தில், நடிகர் விஷ்ணு விஷாலின் லுக் வெளியாகி உள்ளது.
தமிழில் கண்ணோடு காண்பதெல்லாம், கிங், கொக்கி, லீ, மைனா, கும்கி, கயல், தொடரி உட்பட பல படங்களை இயக்கியவர் பிரபு சாலமன்.
இவர் அடுத்து கும்கி 2, காடன் ஆகிய இரண்டு படங்களை இயக்கி வந்தார். காடன் படம் மூன்று மொழிகளில் உருவாகிறது.

ஹாத்தி மேரே சாத்தி
இந்தியில், ஹாத்தி மேரே சாத்தி என்ற பெயரிலும் தெலுங்கில் ஆரண்யா என்ற பெயரிலும் இந்தப் படம் உருவாகிறது. 1971 ஆம் ஆண்டு ராஜேஷ் கண்ணா, தனுஜா நடிப்பில் சாண்டோ சின்னப்பா தேவர் இந்தியில் உருவாக்கிய படம், ஹாத்தி மேரே சாத்தி. எம்.ஏ.திருமுகம் இயக்கி இருந்தார். இதுதான் எம்.ஜி.ஆர் நடிப்பில் தமிழில், நல்ல நேரம் என்று ரீமேக் செய்யப்பட்டது.

விஷ்ணு விஷால்
யானையை மையப்படுத்திய கதை என்பதால், இந்த டைட்டிலை அனுமதி பெற்று இந்தப் படத்துக்கு பயன்படுத்தி உள்ளனர். ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இதில் ராணா, விஷ்ணு விஷால் இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். ஸோயா ஹூசைன், ஸ்ரியா பிலோன்கர், புல்கிட் சாம்ராட், ரோபோ சங்கர், அஸ்வின் ராஜா, ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர்.

யானைகளுடன்
தொடர்ந்து நடந்து வந்த படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தாய்லாந்து காடுகளில் யானைகளுடன் சுமார் 25 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. மூணாறு உட்பட பல்வேறு இடங்களில் உள்ள அடர்ந்த காடுகளிலும் ஷூட்டிங் நடந்துள்ளது. விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்த கும்கி படத்துக்கு பிறகு யானையை வைத்து பிரபு சாலமன் இயக்கும் படம் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு
இந்நிலையில், இந்தப் படம் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. யானையுடன் நடிகர் ராணா ஆவேசமாக நிற்கும் இதன் இந்திப் பதிப்பு போஸ்டரை நேற்று படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் விஷ்ணு விஷால் யானையுடன் நிற்கும் தமிழ் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் விஷ்ணு, யானைப்பாகன் மாறனாக நடிக்கிறார். அவரது லுக் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











