ரத்தம் வழிய கையில் சுத்தியல் உடன் விஷ்ணு விஷால்... மோகன்தாஸ் செகண்ட் லுக் வெறித்தனமாக தயார்!
சென்னை : நடிகர் விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
ராட்சசன், காடான் என இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்று வருகிறது.
இந்த நிலையில் இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள மோகன்தாஸ் படத்தின் செகண்ட் லுக் வெறித்தனமாக தயாராகி வரும் வீடியோவை படக்குழு இப்பொழுது வெளியிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

சொந்த தயாரிப்பிலேயே
தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த இளம் நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் விஷ்ணு விஷால் சமீபகாலமாக தான் நடிக்கும் திரைப்படங்களை தன்னுடைய சொந்த தயாரிப்பிலேயே தயாரித்து வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் வெளியான ராட்சசன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. இந்த திரைப்படம் மிகச்சிறந்த த்ரில்லர் திரைப்படம் என இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

இயற்கையின் முக்கியத்துவத்தை
ராட்சசன் வெற்றியைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் பிரபுசாலமன் இயக்கத்தில் நடித்த காடான் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக்கப்பட்டது. காடுகளையும் மலைகளையும் மிக அழகாக காட்சிப்படுத்தியும் இயற்கையின் முக்கியத்துவத்தைப் பற்றியும் பேசியிருந்தார் காடான் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

சைக்கோ திரில்லர் ஜேர்னரில் மோகன்தாஸ்
இப்பொழுது விஷ்ணு விஷால் இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் மோகன்தாஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க த்ரில்லர் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ரைசா வில்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மோகன்தாஸ் படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார்.

ரத்தம் வழிய செகண்ட் லுக்
மேலும் பிரபல மலையாள நடிகரும் நடிகர் பிரித்விராஜின் சகோதரருமான இந்திரஜித் சுகுமரன் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அட்டகாசமான சைக்கோ திரில்லர் ஜேனரில் உருவாகியுள்ள மோகன்தாஸ் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெறித்தனமாக ஆகி வருகிறது. செகண்ட் லுக் உருவாகும் வீடியோவையும் தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது அதில் ரத்தம் வழிய கையில் சுத்தியல் உடன் விஷ்ணு விஷால் வெறித்தனமாக போஸ் கொடுத்துள்ளார். மோகன்தாஸ் செகண்ட் லுக் வரும் அக்டோபர் 20ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











