»   »  ஆர்யா பெயரை மகனுக்கு வைத்த விஷ்ணு விஷால்: நாசமா போச்சுன்னு சொன்ன ரஜினி

ஆர்யா பெயரை மகனுக்கு வைத்த விஷ்ணு விஷால்: நாசமா போச்சுன்னு சொன்ன ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் தனது மகனுக்கு நடிகர் ஆர்யாவின் பெயரை வைத்துள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி ரஜினி அண்மையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு தனது பெயரை வைக்க வேண்டும் என்று ஆர்யா தனது நண்பன் விஷ்ணு விஷாலிடம் தெரிவித்துள்ளார்.

அவரும் நண்பனின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளார்.

ஆர்யன்

உங்கள் அனைவருக்கும் என் ராக்ஸ்டாரை அறிமுகம் செய்து வைக்கிறேன்.. அவனுக்கு ஆர்யன் என பெயர் வைத்துள்ளோம்.. ஆர்யா, சந்தோஷமா? உன் பெயரை வைக்க சொன்ன உன் ஆசையை நிறைவேற்றிவிட்டேன் என விஷ்ணு விஷால் ட்வீட்டியுள்ளார்.

ஆர்யா

விஷ்ணு விஷாலின் ட்வீட்டை பார்த்த ஆர்யா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஐ லவ் யூ சோ மச் மச்சா. உண்மையான அன்பு. அவன் என்னை மாதிரி பெர்ஃபெக்ட் ஜென்டில்மேனாக வருவான் என்றார்.

நாசமா போச்சு

ரஜினி உன் ட்வீட்டை படித்துவிட்டு அய்யய்யோ நாசமா போச்சு என்றார். ஆனால் என் மகனுக்கு உன் போன்று நல்ல மனசு இருந்தால் சந்தோஷப்படுவேன் என்று விஷ்ணு விஷால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 லவ் யூ

லவ் யூ

ரஜினி நாசமா போச்சு என்று கூறியதை கேட்ட ஆர்யா விஷ்ணு விஷாலுக்காக ட்வீட்டியிருப்பதாவது, ஹாஹாஹாஹா லவ் யூ டார்லிங். குட்டி சாம்பியன் ஆர்யனுக்கு முத்தங்கள் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Actor Vishnu Vishal tweeted that, 'Introducing u all to my ROCKSTAR...v hav named him ARYAN :) arya_offl r u happy? i fullfilled ur wish ..u askd me to name him aftr u :););)'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil