Vishnu Vishal Net Worth: கதைகளின் ஹீரோ... விஷ்ணு விஷாலின் சம்பளம், சொத்து மதிப்பு தெரியுமா?
சென்னை: கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற கனவில் வலம் வந்த விஷ்ணு விஷால், தற்போது சினிமாவில் ஹீரோவாக கலக்கி வருகிறார்.
சுசிந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக் குழு திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியிருந்தார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் லால் சலாம் படத்தில் நடித்து வரும் விஷ்ணு விஷால், இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
திரையுலகில் நடிகர், தயாரிப்பாளார் என மாஸ் காட்டும் விஷ்ணு விஷாலின் சம்பளம், சொத்து மதிப்பு குறித்து தற்போது பார்க்கலாம்.

விஷ்ணு விஷால் சொத்து மதிப்பு:வெண்ணிலா கபடிக் குழு திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். ஆரம்பத்தில் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற கனவில் வலம் வந்த விஷ்ணு விஷால் சினிமாவில் ஹீரோவாகிவிட்டார். கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் விஷ்ணு விஷாலுக்கு, ஆரம்பத்தில் பெரிதாக ஹிட் படங்கள் அமையவில்லை.
அதன்பின்னர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன், கட்டா குஸ்தி போன்ற படங்கள் அவருக்கு சூப்பர் கம்பேக் கொடுத்தன. இதனையடுத்து தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால், லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா இயக்கும் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, விதார்த் ஆகியோரும் விஷ்ணு விஷாலும் ஹீரோவாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இன்று 38வது பிறந்தநாள் கொண்டாடும் விஷ்ணு விஷாலுக்கு லால் சலாம் படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. இப்படத்திற்காக விஷ்ணு விஷாலுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

லால் சலாம் படத்தை முடித்துவிட்டு தனுஷின் 50வது படத்திலும் நடிக்கவுள்ளார் விஷ்ணு விஷால். ஒரு படத்திற்காக 3 முதல் 4 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் விஷ்ணு விஷால் ஆண்டுக்கு 9 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறாராம். அதேபோல் மாதம் 80 லட்சம் முதல் 1 கோடி வரை வருமானம் கிடைக்கிறது. இதன்மூலம் விஷ்ணு விஷால் 31 கோடி வரை சொத்து சேர்த்துள்ளார்.
சென்னையில் சொந்தமாக பிளாட் வாங்கியுள்ள விஷ்ணு விஷால், ஆடி கார் ஒன்றும் சொந்தமாக வைத்துள்ளார். இதுதவிர இன்னும் சில சொத்துகளுக்கும் சொந்தகாரராக விஷ்ணு விஷால் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முதலில் ரஜினி நட்ராஜ் என்பவருடன் திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. அதன்பின்னர் தற்போது ஜுவாலா காட்டா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார் விஷ்ணு விஷால்.


Click it and Unblock the Notifications











