லால் சலாம் ஹீரோ அடுத்து அந்த இயக்குநருடன் இணையப் போகிறாரா?.. அருண்ராஜா ஆளே மாறிட்டாரே!
சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம் வரும் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகிறது. அந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடித்து வருகின்றனர். மேலும் சிறப்பு கேமியோவாக ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
லால் சலாம் படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் அடுத்ததாக எந்த இயக்குனர் படத்தில் நடிக்கப் போகிறார் என்கிற கேள்வி எழுந்து வந்த நிலையில், தற்போது பெரிய சம்பவம் காத்திருக்கு என அவர் வெளியிட்டுள்ள செல்ஃபி புகைப்படத்தில் கனா படத்தை இயக்கிய அருள்ராஜா காமராஜ் இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் அடுத்து விஷ்ணு விஷால் இவரது இயக்கத்தில் தான் நடிக்கப் போகிறாரா என்கிற கேள்வியை எழுப்பி உள்ளனர்.

நெருப்புடா: மான் கராத்தே படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நெருப்பு குமார் என காமெடியனாக நடித்து வந்த அருண்ராஜா காமராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தின் இடம்பெற்ற நெருப்புடா பாடலை பாடி பிரபலமானார். அதன் பின்னர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெளியான கனா திரைப்படத்தை இயற்கை இயக்குநராக வெற்றி பெற்றார்.
கனா இயக்குநர்: பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி அருண்ராஜா காமராஜ் இயக்கிய கனா திரைப்படம் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் நல்ல வரவேற்பை பெற்ற படமாக உள்ளது. சத்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் அந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். கனா படத்திற்கு பிறகு சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான லேபில் வெப்சீரிஸை ஜெய்யை வைத்து இயக்கி இருந்தார் அருண் ராஜா காமராஜ். இந்நிலையில், அடுத்து விஷ்ணு விஷாலை வைத்து அவர் படம் இயக்கப் போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரிய சம்பவம்: பெரிய மீசை வைத்துக்கொண்டு ஆள் அடையாளமே தெரியாமல் அருண்ராஜா காமராஜ் விஷ்ணு சாங் பின்னாடி நிற்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. கேப்டன் மில்லர், வடக்குப்பட்டி ராமசாமி படங்களை ரிலீஸ் செய்த ரோமியோ பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடிய விரைவில் பெரிய அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லால் சலாம்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் விஷ்ணு விஷால் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் வரும் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகிறது. இந்தப்படத்தில் விஷ்ணு விஷால் கிரிக்கெட் வீரராகவும் இஸ்லாமியராக நடித்துள்ளார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விஷ்ணு விஷால் அடுத்து அருண்ராஜா படத்தில் நடிக்க கமிட் ஆக உள்ளார் என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











