ரத்தக் கறையுடன் சுத்தியல்.. த்ரில்லரா?.. விஷ்ணு விஷால் அடுத்த படத்தின் அப்டேட் !
சென்னை: விஷ்ணு விஷாலின் அடுத்த படத்திற்கான டீசர் இன்று வெளியாக உள்ளது.
Recommended Video
விஷ்ணு விஷால் இணையத்தில் தன் படத்தின் அடுத்த அறிவிப்பை பற்றி வெளியிடவா, இந்த கொரன்டைன் நேரத்தில் இது சரியாக இருக்குமா என்பதை ஒரு போலின் வாயிலாக ரசிகர்களுடன் கலந்து ஆலோசித்தார். இதில் பெரும்பாலுமான ரசிகர்கள் படத்தின் அறிவிப்பை கூறுங்கள் என்றே பதிலளித்தனர்.

இதனால் தற்போது அந்த தலைப்பு அறிவிப்புக்கு முன் ஒரு சின்ன போஸ்டரை வெளியிட்டுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். இந்த போஸ்டரில் படத்தின் தலைப்பு டீசராக மாலை 4.07 மணியளவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
படக்குழுவினர் ஏன் 4.07 மணியை தேர்ந்தெடுத்து உள்ளார்கள். அதுவும் சரியாக 4.07வை தேர்ந்தெடுக்க படத்தின் கதை ஏதும் காரணமாக உள்ளதாக என்று போஸ்டரை பார்த்த ரசிகர்கள் பலர் சிந்தித்து வருகின்றனர்.ஏனெனில் பெரும்பாலுமான படங்களின் போஸ்டர் டீசர் இப்படி குறிப்பிட்டு எண் கொண்ட நேரத்தில் வெளியாவதில்லை அப்போது ஏதோ சிறப்பம்சம் இருக்கிறது என்றே அர்த்தம்.
இந்த போஸ்டரில் ஒரு சுத்தியல் அது முழுக்க இரத்தம் அதன் அருகில் ஆபாச புத்தகம் மற்றும் சிதறி கிடக்கும் காண்டம் பாக்கெட்டுகள் என்று படம் ஏதோ ஒரு வித்தியாசமான த்ரில்லர் படம் என்பதை மட்டும் உறுதி செய்திருக்கிறது .

இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் அனைவரும் விஷ்ணு விஷாலுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளனர். மேலும் இந்த போஸ்டரை பார்த்த பல ரசிகர்கள் பல கோணங்களில் படம் இப்படிபட்ட படமாக இருக்கலாம் அப்படிபட்ட படமாக இருக்கலாம் என்று தங்களுக்கு தோன்றியதை இணையத்தில் கூறி வருகின்றனர். சில ரசிகர்கள் இது ராட்சசன் 2 படமாக இருக்க கூட வாய்ப்புகள் இருக்கிறது.ஏனெனில் சுத்தியலில் இரத்தம் இது கிரிஸ்டோபரின் சுத்தியல் என்றும் கூறி வருகின்றனர். இப்படியிருக்க எது உண்மை என்பதை நாம் 4.07 மணியளவில் தான் தெரிந்து கொள்ள முடியும்.
இந்த நேரத்தில் பல பிரபலங்களும் விஷ்ணு விஷாலின் முயற்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் .மேலும் விஷ்ணுவின் காதலியான குட்டா ஜவ்லாவும் இந்த போஸ்டரை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளார் .
இந்த கொரன்டைன் நேரத்திலும் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கில் படக்குழுவுடன் இணைந்து அடுத்த படத்திற்கான முதல் கட்ட பணியில் விஷ்ணு விஷால் இறங்கியிருப்பது பலரிடம் பாராட்டை அவருக்கு பெற்று தந்துள்ளது. இதே நேரத்தில் படத்தின் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதால் டைட்டில் டீசரை காண ஆவலாக காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











