எங்கப்பா டி.ஜி.பி. ஆகிட்டாரு: விஷ்ணு விஷால் ஹேப்பி
சென்னை: தனது தந்தைக்கு டி.ஜி.பி.யாக பதவி உயர்வு கிடைத்துள்ளது என்று ட்வீட் செய்துள்ளார் விஷ்ணு விஷால்.
நடிகர் விஷ்ணு விஷாலுக்கு இன்று மகிழ்ச்சியான நாள். அவரின் ஹீரோ, ரோல் மாடலான தந்தை ரமேஷுக்கு பதிவு உயர்வு கிடைத்துள்ளது. இதை விஷ்ணு விஷால் ட்விட்டரில் தெரிவித்து தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
விஷ்ணு விஷாலின் ட்வீட்டை பார்த்தவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டி.ஜி.பி.
பெருமையான தருணம்... என் தந்தைக்கு டி.ஜி.பி. ஆக பதவி உயர்வு கிடைத்துள்ளது. என் ரோல் மாடல்..சல்யூட் என்று ட்வீட் செய்துள்ளார் விஷ்ணு விஷால்.
ஜுவாலா
விஷ்ணு விஷாலின் ட்வீட்டை பார்த்து அருமை என்று தெரிவித்துள்ளார் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா.
ரசிகர்
விஷ்ணு விஷாலுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருந்தது. அதை நினைவு வைத்து ஒருவர் நலம் விசாரித்துள்ளார்.
அப்பா
உங்களின் அப்பாவுக்கு எங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துவிடுங்கள் என்று ஏராளமானோர் கமெண்ட் போட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











