'என் பயம், வேதனைகள்..' சினிமாவில் 12 வருடம்.. நடிகர் விஷ்ணு விஷால் உருக்க அறிக்கை!

By

சென்னை: இந்த வருடம் அனைவருக்கும் கடினமானதாக அமைந்துவிட்டது என்று நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

Recommended Video

குடித்துவிட்டு தகராறு செய்தேனா? Vishnu Vishal CCTC footage பற்றி விளக்கம்

சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடி குழு' படம் மூலம் ஹீரோவானவர், விஷ்ணு விஷால்.

இந்தப் படம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியானது. இதில் சூரி, கிஷோர், சரண்யா மோகன் உட்பட பலர் நடித்திருந்தனர்.

தொடர்ந்து நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன் உட்பட பல படங்களில் நடித்தார் விஷ்ணு விஷால்.

திடீர் விவாகரத்து

திடீர் விவாகரத்து

சில படங்களை தயாரித்தும் உள்ளார். இவர், பிரபல இயக்குனரும் நடிகருமான நட்ராஜின் மகள் ரஜனியை காதலித்து, கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் இருக்கிறான். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.

ஜுவாலா கட்டா

ஜுவாலா கட்டா

இந்நிலையில், விஷ்ணு விஷாலும் பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் காதலித்து வருகின்றனர். இவர்கள் இந்த வருடம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அவர் சினிமாவுக்கு வந்து 12 வருடம் ஆகிறது. இதையடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

12 வருடங்கள்

12 வருடங்கள்

அதில் அவர் கூறியிருப்பதாவது: நம்பமுடியாத 12 வருடங்கள்! இந்தப் பயணம் முழுவதும் கற்றுக்கொள்ளும் அனுபவமாக இருந்தது. என்னுடைய பயம், வேதனை அனைத்தையும் கடந்து ஒவ்வொரு நாளும் புதிதாகக் கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்தப் பாதையில் என்னை ஆதரித்த ஒவ்வொருவருக்கும் நன்றி.

சிறந்த கதைகள்

சிறந்த கதைகள்

ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு என் அன்பை அளிக்கிறேன். அடுத்து, காடன், எஃப்.ஐ.ஆர், மோகன் தாஸ், இன்று நேற்று நாளை 2, இயக்குநர் செல்லா, மற்றும் இயக்குநர் கோபிநாத்துடன் ஒரு படம் என பணிபுரிந்து வருகிறேன். இன்னும் சில சிறந்த கதைகள் மற்றும் இயக்குநர்களுடன் பணிபுரிய இருக்கிறேன்.

நீந்தி கொண்டிருப்போம்

நீந்தி கொண்டிருப்போம்

கடந்த வருடம் அனைவருக்கும் கடினமானதாக அமைந்துவிட்டது. எனக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தாலும் வாழ்க்கை என்பது தொடர்ந்து முன்னேறிச் செல்வதுதான். தொடர்ந்து அலையோடோ அல்லது அதை எதிர்த்தோ நீந்தி கொண்டிருப்போம். இவ்வாறு கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X