கடைசி நேரத்தில் ஒருவாரம் தள்ளிப்போகும் விஷ்ணு விஷால் படம்.. காரணம் அந்த டாப் நடிகர் தானாம்!

சென்னை: விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆர்யன்' திரைப்படம், தெலுங்கில் வெளியாகும் தேதி மாற்றப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 7ஆம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. மிகப்பெரிய படங்கள் வெளிவரும் சூழலில், அவற்றுக்கு மதிப்பளிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விஷ்ணு விஷால் குறிப்பிட்டுள்ளார்.

ராட்சசன் படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு பெரிய வெற்றியை எதிர்பார்த்து தொடர்ந்து போராடி வருகிறார் விஷ்ணு விஷால். முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், இரண்டாவதாக விளையாட்டு வீராங்கனை ஜுவாலா கட்டாவை திருமணம் செய்து குழந்தையும் பெற்றுக் கொண்டார்.

Vishnu Vishal postponed his Aryan movie Telugu release due to Tollywood Biggies release this week
Photo Credit:

முதல் மனைவிக்கு பிறந்த மூத்த மகன் ஆர்யன் பெயரிலேயே படத்தை உருவாக்கியுள்ள விஷ்ணு விஷால் அக்டோபர் 31ம் தேதி தமிழில் ஆர்யன் படத்தை வெளியிடுகிறார். ஆனால், அதே நேரத்தில் தெலுங்கிலும் அந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்னணி நடிகரின் படம் தெலுங்கில் வெளியாகவுள்ள நிலையில், போட்டி வேண்டாம் என ஒரு வாரம் தள்ளிப்போடுவதாக தெரிவித்துள்ளார்.

விஷ்ணு விஷாலின் ஆர்யன்: அக்டோபர் 31ஆம் தேதி வெளியாவதாக இருந்த 'ஆர்யன்' திரைப்படம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரவி தேஜாவின் மாஸ் ஜதாரா மற்றும் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலி தி எபிக் போன்ற படங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் மட்டும் தாமதம்: நவம்பர் 7, 2025 அன்று திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ளது. விஷ்ணு விஷால் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார். "சினிமா என்பது போட்டி அல்ல, அது ஒரு கொண்டாட்டம். கொண்டாட்டங்களுக்கு அவற்றின் சொந்த இடமும் வெளிச்சமும் தேவை," என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

பெரிய படங்கள்: ரவி தேஜாவின் 'மாஸ் ஜாதரா' மற்றும் 'பாகுபலி: தி எபிக்' ஆகிய படங்கள் இந்த வாரம் தெலுங்கு பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்தும் என்பதால், அவற்றின் வெற்றிக்கு வழிவிடும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

என்ன கதை: தெலுங்கு வெளியீடு ஒத்திவைக்கப்பட்டாலும், 'ஆர்யன்' திரைப்படம் திட்டமிட்டபடி அக்டோபர் 31ஆம் தேதி தமிழில் வெளியாகும். பிரவீன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், கடமைக்கும் மனசாட்சிக்கும் இடையில் சிக்கிய ஒரு காவலரின் சாகசங்களைச் சித்தரிக்கிறது.

"தமிழில் வெளிவரும் அதே அன்போடும், விறுவிறுப்போடும், ஆர்வத்தோடும் 'ஆர்யன்' நவம்பர் 7ஆம் தேதி தெலுங்கில் வெளிவரும்," என்று விஷ்ணு விஷால் மேலும் தெரிவித்தார். இந்தத் திரைப்படம் ஒரு சிக்கலான கதைக்களத்தைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X