முதல் நண்பன் சிம்பு.. ராட்சசன் நினைவுகளில் மிதக்கும் விஷ்ணு விஷால்.. அமலா பாலுக்கும் அட்வைஸ்!

சென்னை: நடிகர் சிம்பு மற்றும் அமலா பாலுடன் இருக்கும் செல்ஃபி புகைப்படங்களை நடிகர் விஷ்ணு விஷால் ஷேர் செய்துள்ளார்.

Recommended Video

Exclusive! Selvaraghavan Fan Boy moment | Vishnu Vishal about Simbhu

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக லாக் டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், நடிகர்கள் தங்களின் பழைய நினைவுகளை சமூக வலைதளங்களில் அசை போட்டு வருகின்றனர்.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறையும் என்று பார்த்தால், அதிகரித்துக் கொண்டே போகிறது.

ஷூட்டிங் பாதிப்பு

ஷூட்டிங் பாதிப்பு

இதனால், ஒட்டுமொத்த திரையுலகமும் கடும் பாதிப்பை சந்திந்துள்ளது. கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் வந்தாலும், உடனடியாக தியேட்டர்கள் திறக்கப்படுமா? என்பதும் ஷூட்டிங் நடத்த அனுமதி வழங்கப்படுமா? என்பதும் கேள்விக் குறிதான். ஷூட்டிங் நடத்த அனுமதி வழங்கினாலும், பல கட்டுப்பாடுகளுடன் தான் அனுமதி அளிக்கப்படும் என தெரிகிறது.

த்ரோபேக்

த்ரோபேக்

ஷூட்டிங்கில் பிசியாக இருந்த நடிகர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய ஓய்வை இந்த கொரோனா காலம் கொடுத்து இருக்கிறது. தங்கள் பழைய நினைவுகளை பல பிரபலங்களும் த்ரோபேக் புகைப்படங்களை வெளியிட்டு அசை போட்டு வருகின்றனர். நடிகர் விஷாலும், தனது ராட்சசன் நினைவுகளை திரும்பி பார்த்துள்ளார்.

அமலா பாலுடன்

அமலா பாலுடன்

ராம் குமார் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான சைக்கோ த்ரில்லர் படமான ராட்சசன் மிகப்பெரிய வெற்றியடைந்தது. நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அந்த படத்தில் நடிகை அமலா பால் நடித்திருந்தார். லாக் டவுனில் வீட்டில் தனியாக தவிக்கும் விஷ்ணு விஷால், தனது மகனை எண்ணி சில நாட்களுக்கு முன்னதாக பதிவிட்டு இருந்த நிலையில், தற்போது அமலா பாலுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அட்வைஸ்

அட்வைஸ்

சமீபத்தில் நடிகை அமலா பால் சோகமாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதனை பார்த்துத் தான் நடிகர் விஷ்ணு விஷால், அமலா பாலுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், நீங்க ரொம்ப திறமையானவர், தொடர்ந்து உங்களுக்கு பிடித்த நடிப்பு வேலையை தொடருங்கள் அது உங்களுக்கு சுதந்திரத்தை அளிக்கும் என்றும் அட்வைஸ் செய்துள்ளார்.

சிம்புவுடன்

சிம்புவுடன்

அடுத்ததாக ராட்சசன் படத்தின் ஷூட்டிங்கிற்கு நடிகர் சிம்பு வந்திருந்து விஷ்ணு விஷாலை சந்தித்தப் போது இருவரும் எடுத்துக் கொண்ட க்யூட் செல்ஃபியையும் நடிகர் விஷ்ணு விஷால் தற்போது வெளியிட்டு, சிம்பு குறித்து பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த சிம்பு ரசிகர்கள் எக்கச்சக்க லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் தெறிக்க விட்டு வருகின்றனர்.

முதல் நண்பன்

முதல் நண்பன்

மேலும், அந்த செல்ஃபி புகைப்பத்திற்கு கேப்ஷனாக, சினிமாவில் நுழைந்து முதல் படம் முடித்த தனக்கு கிடைத்த முதல் சினிமா நண்பன் சிம்பு தான் என்றும், சினிமா குறித்த பல விஷயங்களை தனக்கு சிம்பு போதித்ததாகவும், இன்று வரையிலும், தங்களுக்கு இடையே நல்ல நட்பு நீடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ரசிகர்கள் நன்றி

ரசிகர்கள் நன்றி

சிம்புவுடன் எடுத்துக் கொண்ட த்ரோபேக் செல்ஃபியை பதிவிட்ட விஷ்ணு விஷால், சிம்பு குறித்து பதிவிட்ட கேப்ஷனை பார்த்த அவரது ரசிகர்கள், இப்படி அடுத்த நடிகரை பற்றிய நல்ல விஷயங்களை, உங்களை போல யாரும் வெளிப்படையாக சொல்வதில்லை. சிம்புவின் நல்ல குணங்களை வெளிப்படையாக சொன்னதற்கு நன்றி என சிம்பு ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X