இளம் இயக்குனரை புகழ்ந்த விஷ்ணு விஷால்.. படம் தாறுமாற வந்திருக்கு!
சென்னை : தற்போது உள்ள இளம் நடிகர்களில் தரமான திரைப்படங்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால்.
ராட்சசன் திரைப்படத்தை தொடர்ந்து இப்பொழுது காடன், எஃப்.ஐ.ஆர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் இவர் அதே சமயம் தயாரித்தும் வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் தான் நடித்து வரும் திரைப்படத்தின் இயக்குனரை ஆஹா ஓஹோ என புகழ்ந்து கூறியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

தெலுங்கில் ரீமேக்
இந்திய திரையுலகையே அண்ணார்ந்து பார்க்க வைத்த ராட்சசன் திரைப்படம் பல சாதனைகளை செய்து வசூல் மழையை கொட்டிய நிலையில் அத் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு அங்கு மாபெரும் வெற்றி பெற்றது.

தரமான கதை
இவ்வாறு தரமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து முண்டாசுபட்டி, இன்று நேற்று நாளை, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, பலேபாண்டியா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என எண்ணற்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

எஃப்.ஐ.ஆர்
இந்நிலையில் அறிமுக இயக்குனர் மானு ஆனந்த் இயக்கி வரும் எஃப்.ஐ.ஆர் திரைப்படத்தில் நடித்து வரும் விஷ்ணு விஷால் இதுவரை நடித்திராத புத்தம் புதிய வேடத்தில் நடித்து வருவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

முக்கிய வேடத்தில்
மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடிக்க இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் காமெடி நடிகர் கருணாகரன் உள்ளிட்டோர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர்.

பிறந்தநாளுக்கு வாழ்த்து
இதன் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்த நிலையில் சமீபத்தில் விஷ்ணு விஷால் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பேசி முடிக்கப்பட்ட நிலையில், இதன் இயக்குனர் மானு ஆனந்த் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய விஷ்ணு விஷால் சீக்கிரமாவே இவரோட திறமையப் பார்த்து பாராட்டுவீங்க என்று ட்விட்டர் பக்கத்தில் ஆஹா ஓஹோ என புகழ்ந்து குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் தரமான சம்பவமொன்று காத்திருக்கு போலயே என ஆர்வத்துடன் எஃப்.ஐ.ஆர் திரைப்படத்தை பார்க்க வெயிட்டிங்கில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











