விஷ்ணு விஷால் கேட்ட பர்மிஷன்.. உடனே ஆஜராகி உத்தரவு போட்ட காதலி.. அப்புறம் எதுக்கு இந்த Poll?

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் சினிமா துறை முடங்கி இருக்கிறது.

Recommended Video

Vishnu vishal online Poll | Girlfriend Jwala Gutta Approval | Lock Down Life

சினிமா ஷூட்டிங், புதுப்பட ரிலீஸ், FDFS கொண்டாட்டம் என அனைத்திற்கும் ஒரே அடியாக வேட்டு வைத்துள்ளது கொரோனா வைரஸ்.

இந்நிலையில், தனது புதுப்பட அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

தொடங்கவா.. வேணாமா

விஷ்ணு விஷால் நடிப்பில் ஏற்கனவே FIR, காடன் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில், தனது அடுத்த படத்தின் அறிவிப்பை ஏப்ரல் 11ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருந்த விஷ்ணு விஷால், தனது ரசிகர்களிடம் அதற்கான பர்மிஷனை கேட்க ஒரு Poll ஒன்றை போட்டுள்ளார்.

ஆஜரான காதலி

எப்படா விஷ்ணு விஷால் ட்வீட் போடுவார், அதற்கு ரிப்ளை போடலாம் என ஆன்லைனிலே காத்துக் கிடக்கும் அவரது காதலி ஜுவாலா கட்டா, கமெண்ட் பாக்ஸில் உடனடியாக ரிலீஸ் பண்ணுங்க ப்ளீஸ் என கமெண்ட் செய்து, விஷ்ணு விஷாலுக்கு அன்புக் கட்டளை போட்டுள்ளார்.

அப்போ கன்ஃபார்ம்

அப்போ கன்ஃபார்ம்

கடந்த 2011ம் ஆண்டு ரஜினி நட்ராஜ் உடன் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு திருமணம் நடைபெற்றது. 8 ஆண்டுகால இல்லற வாழ்க்கைக்கு பிறகு, சில பல பிரச்சனை காரணமாக கடந்த 2018ம் ஆண்டு ரஜினி நட்ராஜை நடிகர் விஷ்ணு விஷால் விவாகரத்து செய்தார். தற்போது ஜுவாலா கட்டாவை காதலித்து வரும் விஷ்ணு விஷால், அவங்க சொல்லி கேட்காமலா இருப்பார் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

போர் அடிக்குது

விஷ்ணு விஷாலின் அடுத்த பட டைட்டில் டீசரை ரிலீஸ் பண்ண 70 சதவீதம் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், கொரோனா கலவரத்தால் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் ரசிகர்கள், ரொம்ப போர் அடிக்குது, கண்டிப்பா ரிலீஸ் பண்ணுங்க, வீட்டிலேயே பார்த்து என்ஜாய் பண்றோம் என்கின்றனர்.

இப்போ வேண்டாம்

இப்போதைக்கு என்ஜாய் பண்ற மனநிலையில யாரும் இல்லை. அதுவும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டைட்டில் ரிலீஸ் எல்லாம் படத்துக்கான புரொமோஷன் தான். இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு முடியட்டும், அப்புறம் பொறுமையா ரிலீஸ் பண்ணிக்கலாம் இப்போ வேண்டாம் என்றும் சில ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

என்ன படம்?

என்ன படம்?

தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி ஹிட்டான ஜெர்ஸி படத்தின் ரீமேக்கில் விஷ்ணு விஷால் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. அந்த படத்தின் டைட்டில் டீசர் தான் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெர்ஸி படத்தின் ரீமேக்கா அல்லது வேறு ஒரு புதிய படத்தின் அறிவிப்பா? என்பது நாளைக்கு தெரிந்துவிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X