அமலா பாலா.. ஜுவாலா கட்டாவா.. விஷ்ணு விஷால் விவாகரத்துக்கு யார் காரணம்?

சென்னை: விஷ்ணு விஷாலின் பல வருட திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிய அமலா பால் மற்றும் ஜூவாலா கட்டா தான் காரணம் என விளாசி தள்ளியவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் விஷ்ணு விஷால்.

கடந்த 2009ம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

தொடர்ந்து நீர்ப்பறவை, குள்ள நரி கூட்டம், முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் என விஷ்ணு விஷால் நடிப்பில் பல படங்கள் வெற்றிப்பெற்றுள்ளன.

விவாகரத்து

விவாகரத்து

ராட்சசன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்தடுத்து பெரிய பெரிய படங்களில் விஷ்ணு விஷால் நடிப்பார் என எதிர்பார்த்த அவரது ரசிகர்களுக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏமாற்றமே மிஞ்சியது. அதன் காரணத்தை கடந்த ஜனவரி மாதம் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தார். மேலும், தனது விவாகரத்து குறித்தும் வெளிப்படையாக பேசினார்.

இருண்ட காலம்

இருண்ட காலம்

அந்த இரண்டு வருடங்களும் தனது வாழ்க்கையில் இருண்ட காலமாக இருந்தது என்றும், மதுவுக்கு அடிமைப்பட்டு அவதிப்பட்டு வந்ததையும் விஷ்ணு விஷால், கடிதம் மற்றும் வொர்க்கவுட் வீடியோ மூலம் பேசியிருந்தார். கடந்த ஆறு மாதங்களாக அந்த பாதிப்பில் இருந்து வொர்க்கவுட்டால் தான் மீண்டது எப்படி என்றும் கூறினார்.

அமலா பாலுடன்

அமலா பாலுடன்

ராம் குமார் இயக்கத்தில் வெளியான ராட்சசன் படத்தில் அமலா பால் உடன் இணைந்து நடித்திருந்தார் விஷ்ணு விஷால். அமலா பாலுக்கும் விஷ்ணு விஷாலுக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாகவும், அமலா பால் தான் விஷ்ணு விஷாலின் விவாகரத்துக்கு காரணம் என்றும் வதந்திகள் கிளம்பின.

ஜூவால கட்டா

ஜூவால கட்டா

அதன் பின்னர், பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் விஷ்ணு விஷால் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார். அவருடன் விளையாடும் வீடியோக்களையும் பதிவிட்டு, இருவரும் காதலித்து வருவதாக அறிவிக்க, ஜுவாலா கட்டாவை திருமணம் செய்து கொள்ளத்தான் தனது மனைவியை விஷ்ணு விஷால் விவாகரத்து செய்தார் என்ற பேச்சுக்கள் பலமாக அடிபட்டன.

விஷ்ணு விஷால் விளக்கம்

விஷ்ணு விஷால் விளக்கம்

இந்நிலையில், சமீபத்தில் மீடியா ஒன்றுக்கு அளித்த பேட்டியில், மிகுந்த மன வருத்தத்துடன் பேசிய விஷ்ணு விஷால், தான் விவாகரத்து செய்ததற்கு அமலா பால் மற்றும் ஜூவாலா கட்டா தான் காரணம் என பல்வேறு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஆனால், அதில் ஒரு சதவீதம் கூட உண்மையில்லை என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சொல்ல முடியாது

சொல்ல முடியாது

மேலும், விவாகரத்துக்கான காரணம் என்ன என்பதை தன்னால் சொல்ல முடியாது என்றும் அது தனது தனிப்பட்ட பிரச்சனை என்றும் கூறியுள்ளார் விஷ்ணு விஷால். விஷ்ணு விஷாலுக்கும் அவரது காதலி ஜூவாலா கட்டாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற போவதாக அண்மையில் ஜூவாலா கட்டா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஃபர்ஸ்ட் லுக்

எஃப்.ஐ.ஆர்., காடன் என விஷ்ணு விஷால் நடிப்பில் இரு படங்கள் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் ரிலீஸ் ஆகாமல் காத்திருக்கின்றன. இந்நிலையில், ராட்சசன் ஸ்டைலில் அடுத்த சைக்கோ த்ரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் விஷ்ணு விஷால். முரளி கார்த்திக் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X