Lal Salaam First Review - ரஜினியின் நடிப்பு மிரட்டல்.. கண்டிப்பாக ஹிட் .. லால் சலாம் படத்தின் முதல் விமர்சனம்

சென்னை: ஐஸ்வர்யா இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். படமானது பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அதை பார்த்த ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

லைகா நிறுவனம் லால் சலாம் படத்தை தயாரித்திருக்கிறது. 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா படத்தை இயக்கியிருக்கிறார். இதுவரை அவர் இயக்கிய எந்தப் படமும் வசூல் ரீதியாக சரியாக போகவில்லை என்பதால் இந்தப் படத்தை வணிக வெற்றியாக மாற்றிவிட வேண்டும் என்பதில் முனைப்போடு இருக்கிறார். அதற்காக இப்படத்தில் முக்கியமான ஆட்களை பணியாற்ற வைத்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

Vishnu Vishal Reveals Lal Salaam First Review Here is the details

படத்தில் யார் யார்?: இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படத்தின் ஷுட்டிங் திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடந்தது. லால் சலாம் படத்தின் ஹைலைட்டாக ரஜினிகாந்த் இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக ஜெயிலர் படம் வெளியாகி மெகா ஹிட்டானது. அந்தப் படத்தின் ஷூட்டிங் போய்க்கொண்டிருந்தபோதே லால் சலாம் படத்தில் கமிட்டாகிவிட்டார் ரஜினிகாந்த்.

க்ளிம்ப்ஸ்: ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 12ஆம் தேதி படத்திலிருந்து அவர் தொடர்பான க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியிடப்பட்டன. பக்கா ஆக்‌ஷன் காட்சிகள் அவருக்கு இருக்கின்றன. படத்தில் மொத்தம் 50 நிமிடங்கள்வரை அவர் வருவார் என ஏற்கனவே கூறப்பட்டிருக்கும் சூழலில் அந்த 50 நிமிடங்களும் மாஸாக இருக்கும் என்பதை க்ளிம்ப்ஸ் காட்சிகள் உணர்த்தின. அதேபோல் படத்திலிருந்து இதுவரை வெளியான இரண்டு சிங்கிள்களுமே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன.

எப்போது ரிலீஸ்?: லால் சலாம் முதலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்படவிருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ படத்தின் ரிலீஸ் தேதி திடீரென தள்ளிப்போனது. இந்த சூழலில் படமானது பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தை ஏற்கனவே பார்த்துவிட்ட ரஜினிகாந்த் இப்படம் எப்போது ரிலீஸானாலும் ஹிட்டடிப்பது உறுதி என்று தனது மகளிடம் மகிழ்ச்சியுடன் கூறியதாக சில வாரங்களுக்கு முன்னர் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

என்ன கதை: இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. முக்கியமாக விஷ்ணு விஷாலும், விக்ராந்த்தும் கிரிக்கெட் விளையாட மும்பை செல்லும்போது அங்கு ஒரு பிரச்னை நிகழும். அந்த பிரச்னையிலிருந்து ரஜினிகாந்த் அவர்களை காப்பாற்றுவது போல் திரைக்கதை இருக்கும் என்று படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது. கிரிக்கெட்டை மையப்படுத்திய படம் என்பதால் இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவும் ஒரு ரோலில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல் விமர்சனம்: இந்நிலையில் படத்தில் நடித்திருக்கும் விஷ்ணு விஷால் லால் சலாம் படத்தின் டப்பிங் பணிகளை முடித்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அவர், "லால் சலாம் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டேன். படத்தில் ரஜினிகாந்த்தின் நடிப்பை பார்த்து மிரண்டு போய்விட்டேன். எனது பேச்சை நம்புங்கள். கண்டிப்பாக இது சிறப்பான படமாக இருக்கும். பிப்ரவரி 9ஆம் தேதி உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் பார்ப்பதற்கு ஆவலோடும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். இப்படத்தில் நடித்ததை நினைத்து பெருமைப்படுகிறேன்" என குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X