வாவ்.. செம பர்த்டே ட்ரீட்.. வெளியானது விஷ்ணு விஷாலின் ’Who is Irfan Ahmed?’ வீடியோ!

சென்னை: நடிகர் விஷ்ணு விஷாலின் 36வது பிறந்தநாள் இன்று கோலகலமாக கொண்டாடப்பட்டது.

நள்ளிரவில் சர்ப்ரைஸ் விசிட் அடித்த அவரது காதலி ஜுவாலா கட்டா கேக் வெட்டி பிறந்த நாளை அமர்க்களப்படுத்தினார்.

இந்நிலையில், தற்போது எஃப்.ஐ.ஆர் படக்குழு, 'Who is Irfan Ahmed?' என்ற வீடியோவை வெளியிட்டு, விஷ்ணு விஷால் ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட் கொடுத்திருக்கிறது.

ஹேப்பி பர்த்டே விஷ்ணு விஷால்

ஹேப்பி பர்த்டே விஷ்ணு விஷால்

வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமான நடிகர் விஷ்ணு விஷால், தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட நல்ல திரைப்படங்களை கொடுத்து, நல்ல நடிகர் என்ற பெயரை எடுத்து இருக்கிறார். கடந்த 2018ம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் இந்தியளவில் பலரது பாராட்டுக்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. சிறந்த கலைஞனுக்கு நள்ளிரவு முதலே பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ஹேப்பி பர்த்டே விஷ்ணு விஷால்!

எஃப்.ஐ.ஆர்

எஃப்.ஐ.ஆர்

ஃபைஸல் இப்ராஹிம் ரய்ஸ் என்ற பெயர் சுருக்கமாக எஃப்.ஐ.ஆர் என்ற படத்தில் நடித்துள்ளார் விஷ்ணு விஷால். இந்த படத்தை இயக்குநர் மனு ஆனந்த் இயக்கி உள்ளார். மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன், ரெபா மோனிகா உள்ளிட்ட நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர். மேலும், கெளதம் மேனன், கெளரவ் நாராயணன் உள்ளிட்ட இயக்குநர்களும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இது உருவாகி இருக்கிறது.

யார் இந்த இர்ஃபான் அகமது

எ.ஃப்.ஐ.ஆர் என்ற பட டைட்டிலுக்கு, ஃபைஸல் இப்ராஹிம் ரய்ஸ் என்ற அர்த்தத்தை படக்குழு சொன்ன நிலையில், தற்போது நடிகர் விஷ்ணு விஷாலின் கதாபாத்திர பெயர் இர்ஃபான் அகமது என்பது ரிவீல் செய்யப்பட்டு இருக்கிறது. விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு அது தொடர்பாக ஒரு பாடல் வீடியோ ஒன்றையும் எஃப்.ஐ.ஆர் படக்குழு பிறந்தநாள் பரிசாக தற்போது வெளியிட்டு இருக்கிறது.

சமூக பிரச்சனை

சமூக பிரச்சனை

சாதாரண ஐஐடி முஸ்லீம் மாணவனான இர்ஃபான் அகமது, வீட்டில் நல்ல பிள்ளையாகவும் அன்னையின் செல்லப் பிள்ளையாகவும் வளர்கிறார். இந்த படத்தில் அவருக்கு அம்மாவாக மலையாள நடிகை மாலா பார்வதி நடித்துள்ளார். சமூக பிரச்சனை காரணமாக சாமானியன் எப்படி தீவிரவாதியாக மாறுகிறான் என்பதே இந்த படத்தின் கதைக்களமாக இருக்கும் என்பது வெளியான பாடலின் மூலம் தெரிகிறது.

வெயிட்டிங்

வெயிட்டிங்

இந்த ஆண்டு குடியரசு தினத்துக்கு வெளியாகும் என எதிர்பார்க்கபப்ட்ட இந்த படம் சுதந்திர தினத்துக்கு கூட ரிலீஸ் ஆகுமா? என்பது தெரியவில்லை. ஏற்கனவே வெளியான படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் வைரலான நிலையில், இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். மேலும், காடன் படத்தின் ரிலீசுக்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X