நேரடியாக ஒடிடியில் வெளியாகும் விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர்!

சென்னை : விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் திரைப்படம் ஒடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்தில் கௌதம் மேனன், கௌரவ் நாராயணன், மஞ்சிமா மோகன் ,ரெபா மோனிகா ஜான், சைரா வில்சன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தீவிரவாதத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அஸ்வத் இசையமைத்துள்ளார்.

அறிமுகம்

அறிமுகம்

சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தின் வாயிலாக திரைத்துறையில் தனது அறிமுகத்தை கொடுத்தார் விஷ்ணு விஷால்

போலீஸ் அதிகாரியாக.

போலீஸ் அதிகாரியாக.

ஜீவா, இடம் பொருள் ஏவல், இன்று நேற்று நாளை போன்ற வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். மேலும், ராட்சசன் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தி இருந்தார் விஷ்ணு விஷால். கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.

தீவிரவாத கதை

தீவிரவாத கதை

மனு ஆனுந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்து வரும் படம் எஃப்.ஐ-ஆர். இப்படத்தில் விஷ்ணு விஷால் அபு பக்கர் அப்துல்லா என்ற கதாபாத்திரத்தில் ஒரு இஸ்லாமிய இளைஞராக நடித்துள்ளார். மேலும் கௌதம் மேனன் காவல்துறை உயர்அதிகாரியாக நடித்துள்ளார். தீவிரவாதத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அஸ்வத் இசையமைத்துள்ளார்.

ஒடிடியில் ரீலிஸ்

ஒடிடியில் ரீலிஸ்

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் எஃப்.ஐ.ஆர் திரைப்படத்தை நேரடியாக டிஜிட்டலில் வெளியிட விஷ்ணு விஷால் முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் ஒடிடிரீலிஸ் குறித்த தகவல் இன்னும் சில தினங்களில் உறுதியாகிவிடும் எனத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X