ராயல் சல்யூட் போட வைக்கும் நல்லிணக்க பாடல்...லைக்குகளை அள்ளும் விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர்

சென்னை : நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள எஃப்ஐஆர் படத்தின் ரிலீஸ் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் மீது அனைவரின் கவனத்தையும் திரும்ப வைக்கும் விதமாக Anthem of Harmony என்ற தலைப்பில் ஸ்பெஷல் நல்லிணக்க பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். 2007 ம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தவர் விஷ்ணு விஷால். அதற்கு பிறகு இவர் நடித்த நீர்ப்பறவை, ராட்சசன் போன்ற படங்கள் அனைவரையும் கவர்ந்தது. சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான ராட்சசன் படத்திற்கு பிறகு ஆக்ஷன் ஹீரோவாகவே மாறி உள்ளார் விஷ்ணு விஷால்.

அடுத்த ஆக்ஷன் ரெடி

அடுத்த ஆக்ஷன் ரெடி

தற்போது அடுத்த ஆக்ஷன் படமான எஃப்ஐஆர் படத்தில் நடித்து முடித்துள்ளார். அறிமுக இயக்குனரான மானு ஆனந்த் இந்த படத்தை இயக்கி உள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் படமான இந்த படத்தை விஷ்ணு விஷாலின் விவி ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. கெளதம் மேனன், மஞ்சிமா மோகன், ரிபா மோனிகா ஜான், ரைசா வில்சன், கெளரவ் நாராயணன், பிரஷாந்த் ரங்கசாமி உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.

பிப்ரவரி 11 ல் எஃப்ஐஆர்

பிப்ரவரி 11 ல் எஃப்ஐஆர்

அஸ்வந்த் இசையமைத்துள்ள இந்த படத்தின் ஷுட்டிங் 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் துவங்கப்பட்டு, 2021 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முடிவடைந்தது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ரிலீஸ் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்பட்டதால், தற்போது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். பிப்ரவரி 11 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக நேற்று உறுதி செய்யப்பட்டது.

 யார் வெளியிடுறாங்க தெரியுமா

யார் வெளியிடுறாங்க தெரியுமா


உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் தான் இந்த படத்தை வெளியிட உள்ளது. ரிலீஸ் தேதியை ரெட் ஜெயின்ட் மூவிஸ் அறிவித்ததற்காக இந்த இக்கட்டான நிலையிலும் கடும் முயற்சி செய்து படத்தை ரிலீஸ் செய்ய முயற்சி மேற்கொண்டதற்காக உதயநிதிக்கு ட்விட்டரில் விஷ்ணு விஷால் நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அனைவரின் கவனத்தையும் படத்தின் மீது திரும்பச் செய்வதற்காக வீடியோ பாடல் ஒன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது.

 அசத்தலான Anthem of Harmony

அசத்தலான Anthem of Harmony

அஸ்வந்த்தின் இசையில் நரேஷ் ஐய்யர் பாடிய இந்த நல்லிணக்க பாடல், மனதை வருடும் மெல்லிய இசையுடன் மத ஒன்றுமை, மனிதநேயம், சமூக ஒற்றுமை, அமைதி ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. Anthem of Harmony என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த பாடலின் துவக்கத்திலேயே தேசிய கீதத்தை போன்று உணர்வுடன் கேளுங்கள் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து மனிதநேயம் மதங்களை விட பெரியது என்ற வாசகம், இஸ்லாமிய இளைஞராக தோன்றும் விஷ்ணு விஷால் என படத்தின் மீதான ஆர்வத்தை பல மடங்கு அதிகரிக்க செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X