விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் ரிலீஸ் எப்போது... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

சென்னை : நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில் ஆக்ஷன் திரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் எஃப் ஐ ஆர்

இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரைசா வில்சன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர்

விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்து இருக்க இப்பொழுது இதன் ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவலை விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார்

 ஹீரோவாக நடிப்பதோடு தயாரித்தும் உள்ளார்

ஹீரோவாக நடிப்பதோடு தயாரித்தும் உள்ளார்

ராட்சசன் வெற்றிக்குப் பிறகு விஷ்ணு விஷால் தேர்ந்தெடுத்து நடித்து நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமாக உள்ளது. அந்த வகையில் ஆக்ஷன் திரில்லர் கதை களத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் எஃப்ஐஆர். இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிப்பதோடு தயாரித்தும் உள்ளார். விஷ்ணு விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டுடியோ இப்படத்தை தயாரித்துள்ளது.

 க்ரைம் திரில்லர் கதை களத்தில் இப்படம் உருவாகியுள்ளது

க்ரைம் திரில்லர் கதை களத்தில் இப்படம் உருவாகியுள்ளது

ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ் என்பதை சுருக்கி எஃப்.ஐ.ஆர் என்று படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர். ரைசா வில்சன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். கௌதம் வசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வித்தியாசமான த்ரில்லர் கதை களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்பட்டு சில காரணங்களால்

தாமதமாக நடைபெற்று வந்தது. க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்திற்கு படக்குழு மிகவும் மெனக்கெட்டு இருப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

 திரையரங்குகளில் மட்டும் தான் வெளியாகும்

திரையரங்குகளில் மட்டும் தான் வெளியாகும்

ஒரு அனைத்து கட்டப் பணிகளும் முடிந்து எஃப் ஐ ஆர் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது என்ற பொய்யான தகவல் பரவியது. ஆனால் அதை விஷ்ணு விஷால் மறுத்திருந்தார். மேலும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் மட்டும் தான் வெளியாகும் என உறுதியாக கூறி இருந்தார். அதன்படி இப்பொழுது எஃப்ஐஆர் படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

 அடுத்த வருடம் பிப்ரவரி மாதம்

அடுத்த வருடம் பிப்ரவரி மாதம்

அதன்படி இந்த படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பை விஷ்ணு விஷால் தற்போது அறிவித்துள்ளார். மேலும் எஃப் ஐ ஆர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகிறது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஷ்வந்த் இப்படத்திற்கு அட்டகாசமாக இசையமைத்துள்ளார். அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X