வெளியானது விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் படத்தின் டீசர்.. நான்கு பிரபலங்கள் வெளியிட்டு அசத்தல்!

Recommended Video

Vishnu Vishal Marry his Girlfriend? | jwala Gutta | FIR

சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள எஃப்ஐஆர் படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது.

அறிமுக இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் எஃப்ஐஆர். இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் விஷ்ணு விஷால்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.

எஃப்ஐஆர் படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெப்பா மோனிகா ஜான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்திற்காக நடிகர் விஷ்ணு விஷால் தனது உடல் எடையை குறைத்து சிக்ஸ் பேக்கெல்லாம் வைத்து மிரட்டியிருக்கிறார்.

செகன்ட் லுக்

செகன்ட் லுக்

விஷ்ணு விஷால் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இந்த போஸ்டரை இயக்குநர் கவுதம் மேனன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் வெளியிட்டனர். படத்தின் 2 ஆவது போஸ்டர் ஜனவரி 11 ஆம் தேதி வெளியானது. இதனை நடிகர் விஷ்ணு விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

நான்கு பிரபலங்கள்

நான்கு பிரபலங்கள்

அப்போதே டீசர் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவித்திருந்தார் நடிகர் விஷ்ணு விஷால். மேலும் எஃப்ஐஆர் டீசரை நடிகர்கள் ராணா, நிவின் பாலி, கிச்சா சுதீப், மற்றும் நடிகை காஜல் அகர்வால் ஆகியோர் வெளியிடுவார்கள் என்றும் கூறியிருந்தார் விஷ்ணு விஷால்.

கிச்சா சுதீப்

இந்நிலையில் படத்தின் டீசர் இன்று மாலை 6.5 மணிக்கு வெளியானது. திரைத்துறையை சேர்ந்த நான்கு பிரபலங்களும் அவரவர் டிவிட்டர் பக்கங்களில் டீசரை வெளியிட்டனர். தனது டிவிட்டர் பக்கத்தில் டீசரை வெளியிட்ட நடிகர் சுதீப், என்னுடை சகோதரருக்கு என்னுடைய வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

நிவின் பாலி

இதேபோல் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் நிவின் பாலியும் தனது டிவிட்டர் பக்கத்தில் எஃப்ஐஆர் படத்தின் டீசரை வெளியிட்டார். மேலும் எஃப்ஐஆர் படத்தின் டீசரை வெளியிடுவதில் மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ள நிவின் பாலி, படக்குழுவுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

காஜல் அகர்வால்

இதேபோல் தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வாலும் எஃப்ஐஆர் டீசரை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மேலும் எஃப்ஐஆர் படத்தின் டீசரை வெளியிடுவதில் ரொம்பவே மகிழ்ச்சி என்றும் குட்லக் விஷ்ணு விஷால் மற்றும் படக்குழு என்றும் பதிவிட்டுள்ளார்.

ராணா டக்குபதி

இதேபோல் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராணா டக்குபதியும் தனது டிவிட்டர் பக்கத்தில் எஃப்ஐஆர் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். மேலும் டீசர் அனல் பறக்கிறது என்றும் எஃப்ஐஆர் படத்தை பார்க்க காத்திருப்பதாகவும் கூறியுள்ள அவர் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X