வெளியானது எஃப்ஐஆர் ட்ரெயிலர்... மேடையில் கண்கலங்கிய விஷ்ணு விஷால்
சென்னை : நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள படம் எஃப்ஐஆர்.
Recommended Video
படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் நடிகர், நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் விஷ்ணு விஷாலின் தந்தை மேடையில் பேசியபோது விஷ்ணு கண்கலங்கிய சம்பவம் நடைபெற்றது.

எஃப்ஐஆர் படம்
நடிகர் விஷ்ணு விஷால் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள படம் எஃப்ஐஆர். இந்தப் படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில் வரும் 11ம் தேதி இந்தப் படம் தமிழ், தெலுங்கில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ட்ரெயிலர் ரிலீஸ்
இதையொட்டி ட்ரெயிலர் ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் நடிகர், நடிகைகள் விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன், ரைசா, ஸ்டண்ட் சில்வா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷ்ணு விஷாலின் தந்தை மேடையில் பேசியபோது விஷ்ணு கண்கலங்கிய சம்பவம் நடைபெற்றது.

கண்கலங்கிய விஷ்ணு விஷால்
நிகழ்ச்சியில் பேசிய விஷ்ணுவின் தந்தை ரமேஷ் குடவாலா, ஒரு தந்தையாக தனது மகனை இப்படி பார்ப்பது பெருமை என்று தெரிவித்தார். இதைக் கேட்ட விஷ்ணு மேடையிலேயே கண்கலங்கினார். தந்தையின் வார்த்தைகளை கேட்டு தான் எமோஷனலாகி விட்டதாக பேசியபோது கூறினார்.

பொறுப்புகள் அதிகமாகியுள்ளது
தன்னுடைய வாழ்க்கையில் அதிகமான தோல்விகளை கடந்து வந்துள்ளதாகவும் ராட்சசன் படத்திற்கு பிறகு இந்திய அளவில் அதிகமான பாராட்டுக்கள் கிடைத்ததாகவும் அதனால் பொறுப்புகள் அதிகமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தனுஷ் பாராட்டு
படத்தை பார்த்த தனுஷ், தன்னை பாராட்டியது பெருமையாக இருந்ததாகவும் உதயநிதி கொடுத்த அறிவுரைகள் தனக்கு மிகவும் உபயோகமாக இருந்ததாகவும் அவர் மேலும் கூறினார். ராட்சசன் விஷ்ணுவிற்கும் எஃப்ஐஆர் விஷ்ணுவிற்கும் அதிகமான வித்தியாசங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய வேடத்தில் கௌதம் மேனன்
இந்த நிகழ்ச்சியில் படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெயிலரில் விஷ்ணு விஷாலுடன் கௌதம் மேனன், ரைசா, மஞ்சிமா உள்ளிட்டவர்களின் சிறப்பான நடிப்பும் வெளிப்பட்டுள்ளது. இந்தப் படம் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. படம் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











