எப்ஐஆர் படத்தின் அப்டேட்… நாளை வெளியாக உள்ளதாக விஷ்ணு விஷால் அறிவிப்பு
சென்னை : விஷ்ணு விஷால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் எப்ஐஆர்.
இந்தப் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் முழுவீச்சில் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் படத்தின் அடுத்த அப்டேட் குறித்து நாளைய தினம் அறிவிக்க உள்ளதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால்
நடிகர் விஷ்ணு விஷால் தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான ராட்சசன் படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்தது. படத்தில் காவலராக பணிபுரியும் அவர் சைக்கோ கொலையாளியால் எவ்வாறு நேரிடையாக பாதிக்கப்படுகிறார் என்பதையும் அதை எவ்வாறு கண்டறிகிறார் என்பதையும் கதைக்களமாக கொண்டு இந்தப் படம் வெளியானது.

எப்ஐஆர் படம்
திரைக்கதையிலும் சிறப்பான வகையில் அமைந்து அனைவரின் விருப்பத்திற்குரிய படமாகவும் ராட்சசன் அமைந்தது. இந்நிலையில் தற்போது எப்ஐஆர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் விஷ்ணு விஷால். இந்தப் படத்தை அவர் தயாரிக்கவும் செய்துள்ளார். படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகிறது.

மனு ஆனந்த் இயக்கம்
படத்தில் மஞ்சிமா மோகன் ரைசா வில்சன், ரெபா மோனிகா உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்த மனு ஆனந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கௌதம் மேனனும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

அஸ்வத் இசை
படத்திற்கு அஸ்வத் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள இந்தப் படம் முன்னதாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது படத்தின் அப்டேட் குறித்து நாளைய தினம் அறிவிக்க உள்ளதாக விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆக்ஷன் த்ரில்லர் படம்
இந்தப் படத்தில் போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக நடித்துள்ளார் விஷ்ணு விஷால். அதற்கான பிளாஷ்பேக் போன்றவை மிரட்டலாக எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

செல்லக் கோபம்
இந்நிலையில் விஷ்ணு விஷாலின் இந்த ட்வீட்டிற்கு அவரது மனைவி ஜூவாலா கட்டா என்னிடம் எதுவுமே சொல்லவில்லையே என்ற செல்லக் கோபம் கொண்டுள்ளார். இந்த கமெண்ட்டிற்கு பதிலளித்துள்ள விஷ்ணு விஷால், ஏற்கனவே போஸ்ட் புரொடக்ஷனின் போது அதிகமான முறை படத்தை பார்த்துள்ளதால் இந்த அறிவிப்பு சஸ்பென்சாக இருக்கட்டும் என்று தான் கூறாமல் விட்டதாக கூறியுள்ளார்.

வரவேற்பை பெற்ற பாடல்கள்
முன்னதாக எப்ஐஆர் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது விஷ்ணு விஷாலின் ட்வீட் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் மட்டுமின்றி மோகன்தாஸ் படத்திலும் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். இதையடுத்து ராட்சசன் 2 படத்திலும் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











