விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் படத்தின் வீடியோ பாடல் ரிலீஸ் தேதி வெளியானது!

சென்னை : முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, ராட்சசன் என தரமான படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால்.

இப்பொழுது மனு ஆனந்த் இயக்கத்தில் எஃப்ஐஆர் என்ற த்ரில்லர் கதையில் நடித்து வருகிறார்.

விரைவில் இப்படம் வெளியாக இருக்க தற்போது இப்படத்திலிருந்து வீடியோ பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய வேடத்தில் ராணா

முக்கிய வேடத்தில் ராணா

நடிகர் விஷ்ணு விஷால் அடுத்தடுத்த படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவ்வகையில் சமீபத்தில் வெளியான காடன் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதில் முக்கிய வேடத்தில் நடிகர் ராணா நடித்திருந்தார்.

த்ரில்லர் படத்தில்

த்ரில்லர் படத்தில்

இப்பொழுது சொந்த தயாரிப்பில் "எஃப்ஐஆர்" என்ற த்ரில்லர் படத்தில் ஆக்ரோஷமாக நடித்து வருகிறார். மனு ஆனந்த் இயக்கி வரும் இந்த படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன்,ரெபா மோனிகா என மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இப்பொழுது மீண்டும் தொடங்கப்பட்டு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

ரொமான்டிக் வீடியோ பாடல்

ரொமான்டிக் வீடியோ பாடல்

எஃப்ஐஆர் படத்திலிருந்து ஏற்கனவே ஒரு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்பொழுது அடுத்த பாடலைப் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி "பயணம்" என்ற ரொமான்டிக் வீடியோ பாடல் ஜூலை 17ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரில் விஷ்ணு விஷால், ரெபா மோனிகா படகு சவாரி செய்யும் இடத்தில் நின்றுகொண்டுள்ளனர்

புது போஸ்டர்

புது போஸ்டர்

ராட்சசனுக்குப் பிறகு விஷ்ணு விஷால் எஃப்ஐஆர் படத்தில் த்ரில்லர் கதை களத்தில் நடித்து வருவதால் பெரும் எதிர்பார்ப்பு இருக்க விரைவிலேயே ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் விஷ்ணு விஷால் மோகன்தாஸ், ராட்சஷன் 2 ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முதல் கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X