Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
இந்த வாரம் பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டிய விஷ்ணு விஷால்… மோசம் போன விஜய் சேதுபதி!
சென்னை: தமிழில் இந்த வாரம் விஜய் சேதுபதியின் DSP, விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின.
அதேபோல், அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய கோல்டு திரைப்படம் தமிழ், மலையாளம் மொழிகளில் வெளியாகியுள்ளது.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விஜய் சேதுபதியின் DSP படத்துக்கு கிடைத்த நெகட்டிவான விமர்சனங்களால் பாக்ஸ் ஆபிஸிலும் பல ஏற்ற இறக்கங்கள் நடந்துள்ளன.
வெண்ணிலா
கபடி
குழு
பட
நடிகர்
ஹரி
வைரவன்
காலமானார்…
திரையுலகினர்,
ரசிகர்கள்
அதிர்ச்சி!

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட DSP
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல் என கிடைக்கும் எல்லா கேரக்டர்களிலும் அசத்தி வருகிறார். விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்த விஜய் சேதுபதி, தற்போது DSP படத்தில் நடித்துள்ளார். இந்த வாரம் தியேட்டர்களில் வெளியான இந்தப் படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி - பொன்ராம் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளதால், DSP படத்துக்கு அதிகம் எதிர்பார்ப்பு இருந்தது.

பாக்ஸ் ஆபிஸில் ஏமாற்றம்
விஜய் சேதுபதி போலீஸாக நடித்துள்ள DSP ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ளது. ரசிகர்களோ 'சேதுபதி' படம் போல இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால், DSP மொரட்டு மொக்கை என கையெடுத்து கும்பிடாத குறையாக தியேட்டரை விட்டு தெறித்து ஓடுகின்றனர். விஜய் சேதுபதி ஜோடியாக அனுகீர்த்தி வாசன், ஷிவானி, புகழ் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம், முதல் நாளில் 1.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. விஜய் சேதுபதியின் படத்துக்கு இது ரொம்பவே குறைவான ஒப்பனிங் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி
இந்த வாரம் விஷ்ணு விஷால் நடித்த கட்டா குஸ்தி திரைப்படமும் வெளியாகியுள்ளது. விஷ்ணு விஷால் ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ள இந்தப் படத்தை செல்ல ஐய்யாவு இயக்கியுள்ளார். காமெடி ஜானரில் கமர்சியலாக உருவாகியுள்ள கட்டா குஸ்தி, விஷ்ணு விஷாலுக்கு சூப்பர் கம்பேக் கொடுத்துள்ளது. பாசிட்டிவான விமர்சனங்களால் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ள கட்டா குஸ்தி, முதல் நாளில் ஒரு கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். விஷ்ணு விஷாலின் படம் முதல் நாளில் ஒரு கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோல்டு, லவ் டுடே
மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கியுள்ள கோல்டு திரைப்படமும் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரமேம் படத்தை அடுத்து 7 ஆண்டுகளுக்குப் பின்னர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கியுள்ள கோல்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தாலும், நெகட்டிவான விமர்சனங்களை தான் அதிகம் பார்க்க முடிகிறது. இந்தப் படம் முதல் இரண்டு நாட்களில் 3 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். அதேபோல், கடந்த மாதம் வெளியான லவ் டுடே, தற்போது நெட்பிளிக்ஸில் ஸ்டீரிமிங் ஆனாலும், தியேட்டர் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து அசத்தி வருகிறதாம்.