மூன்று மொழிகளில் வெளியாகும் காடன்.. எப்போ தெரியுமா? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள காடன் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால்.

தனக்கான கதைகளை கச்சிதமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரது படத்திற்கு என்றே ஒரு பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது.

தெலுங்கு வர்ஷன்

தெலுங்கு வர்ஷன்

பிரபல நடிகரான விஷ்ணு விஷால், தற்போது காடன், ஆரண்யா, ஜகஜால கில்லாடி, எஃப் ஐ ஆர், மோகன்தாஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் ஆரண்யா காடன் படத்தின் தெலுங்கு வர்ஷனாக உருவாகிறது.

காதலியுடன் மாலத்தீவில்

காதலியுடன் மாலத்தீவில்

நடிகர் விஷ்ணு விஷால் தற்போது மாலத்தீவில் தனது காதலியான ஜூவாலா கட்டாவுடன் ஓய்வை கழித்து வருகிறார். அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் விஷ்ணு விஷால்.

மார்ச் 26 ரிலீஸ்

மார்ச் 26 ரிலீஸ்

இந்நிலையில் அவரது நடிப்பில் ரிலீசுக்கு தயாராக உள்ள காடன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது காடன் படம் வரும் மார்ச் 26 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராணா டக்குபதியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் ஹாத்தி மேரே சாத்தி

இந்தியில் ஹாத்தி மேரே சாத்தி

தமிழில் காடன் என்ற பெயரிலும் தெலுங்கில் ஆரண்யா என்ற பெயரிலும் இந்தியில் ஹாத்தி மேரே சாத்தி என்ற பெயரிலும் படம் ரிலீஸ் ஆகிறது. இதில் ஆரண்யா மற்றும் காடன் படத்தின் ட்ரெயிலர் வரும் மூன்றாம் தேதியும் ஹாத்தி மேரே சாத்தி படத்தின் ட்ரெயிலர் 4ஆம் தேதியும் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X