ரசிகர்கள் காத்திருந்த அப்டேட் வந்தாச்சு... ‘கட்டா குஸ்தி 2’ எப்போது ரிலீஸ் தெரியுமா?
சென்னை: 2022 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'கட்டா குஸ்தி'. குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களுடன் நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான கதைக்களத்தில் உருவான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகமான 'கட்டா குஸ்தி 2' உருவாக்கப்பட்டு வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
கட்டா குஸ்தி முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகும் இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாஸ், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

கட்டா குஸ்தி 2: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, ஒரே கட்டமாக நடத்தப்பட்டு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள், பின்னணி இசை, டப்பிங் மற்றும் எடிட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.சமீபத்தில் வெளியிடப்பட்ட மேக்கிங் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதியையும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் ஜூலை 3-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ரிலீஸ் தேதி: விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக 'ஆர்யன்' திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது 'கட்டா குஸ்தி 2', இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கும் புதிய படம் மற்றும் மேலும் சில அறிவிக்கப்படாத திட்டங்களை கைவசம் வைத்துள்ளார். தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து வரும் விஷ்ணு விஷால், இந்த ஆண்டில் பல படங்களுடன் ரசிகர்களை சந்திக்க தயாராகி வருகிறார்.ஜூலை 3-ம் தேதி வெளியாகும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படம், முதல் பாகத்தைப் போலவே ரசிகர்களின் மனதை கவருமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications