ஃபுல் ஃபோர்சுடன் களமிறங்கும்.. விஷ்ணு விஷாலின் மோகன்தாஸ்.. அக்டோபர் 20ந் தேதி தரமான அப்டேட் !
சென்னை : விஷ்ணு விஷால் நடிக்கும் மோகன்தாஸ் திரைப்படம் குறித்த மாஸ் அப்பேட் அக்டோபர் 20ந் தேதி வெளியாக உள்ளது.
மோகன்தாஸ் படத்தில் விஷால் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ், மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

மோகன்தாஸ்
வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து, தமிழ்த் திரையுலகில் தன்னை நிலை நிறுத்தியவர் விஷ்ணு விஷால். தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள எஃப்.ஐ.ஆர் படத்தில் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ளார். இதையடுத்து மோகன்தாஸ் திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

த்ரில்லர் மூவி
மோகன்தாஸ் படத்தை களவு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான முரளி கார்த்திக் இயக்கி உள்ளார். இந்தப் படம் ஒரு எமோஷனல் த்ரில்லர் பாணியிலான கதையாகும். பார்வையாளர்களுக்குக் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்கிறது படக்குழு. இதில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

டீசர் வரவேற்பை பெற்றது
மோகன்தாஸ் படத்தில் டீஸர் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் விஷ்ணு சைக்கோ கொலைகாரனாக காட்டப்பட்டு இருந்தார். அந்த டீசரில் ஒருவரை சுத்தியலால் அடித்து.. அடித்து.. பல முறை அடித்து.. கொலை செய்கிறார். அதன் பிறகு ரத்தம் சொட்ட சொட்ட அதே சுத்தியை தூக்கி சென்று கண்ணாடி முன்னர் நிற்கிறார். அங்கு சட்டையை கழற்றிவிட்டு ரத்தத்தை தன் உடம்பில் தேய்த்து கொண்டு, அதன் பிறகு சட்டையை அப்படியே எடுத்துச்சென்று வாஷிங் மெஷினில் துவைக்கிறார்.

மாஸ் அப்டேட்
தற்போது, மோகன்தாஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, வருகிற அக்டோபர் 20ஆம் தேதி மோகன்தாஸ் படத்தின் முக்கியமான அறிவிப்பு மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவித்துள்ளது. மேலும் மோகன்தாஸ் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் மேக்கிங் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

பல நடிகர்கள்
இப்படத்தில் இந்திரஜித் சுகுமாரன், பூர்ணிமா பாக்யராஜ், கருணாகரன், அக்ஷய் ராதாகிருஷ்ணன், ஷாரிக், லாலு, பிரகாஷ் ராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











