அடுத்த ராட்சசனா? விஷ்ணு விஷால் சிங்கம் ஐஸ்வர்யா ராஜேஷ் மானை வேட்டை ஆடுமா? மோகன் தாஸ் டீசர் ரிலீஸ்!

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் கார்த்தி இணைந்து தற்போது விஷ்ணு விஷாலின் மோகன் தாஸ் பட டீசரை வெளியிட்டுள்ளனர்.

டீசர் ஆரம்பிக்கும் போதே விஷ்ணு விஷாலின் வித்தியாசமான கதை சொல்லும் விதத்தில் தொடங்கும் டீசரில் ஏகப்பட்ட ராவான காட்சிகள் மற்றும் அழுத்தமான நடிப்பு இயல்பாகவே தென்படுகிறது.

சிங்கம் வேண்டாம் என புலி, சிறுத்தை, நரி என வேறு மிருகங்களின் பெயர்களை சொல்லிக் கொண்டே வரும் விஷ்ணு விஷால் கடைசியாக இங்கி பிங்கி பாங்கி போடுவது எல்லாம் டீசரையே ரசிக்கத் தூண்டுகிறது.

காந்தியின் பெயர்

காந்தியின் பெயர்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான மகான் திரைப்படம் முழுக்கவே காந்தியை பற்றி பல இடங்களிலும் கதை ரீதியாகவும் பேசப்பட்டு இருந்தன. இந்நிலையில், மோகன் தாஸ் என காந்தியின் பெயரையே டைட்டிலாக வைத்து கையில் சுத்தியலை எடுத்துக் கொண்டு அவரது அஹிம்சை கொள்கைக்கு நேர் எதிராக முதல் போஸ்டரை வெளியிட்டபோதே கவனத்தை ஈர்த்து இருந்தார் விஷ்ணு விஷால்.

அடுத்த ராட்சசனா

அடுத்த ராட்சசனா

வெண்ணிலா கபடி குழுவில் தொடங்கி முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, ராட்சசன், எஃப்.ஐ.ஆர் என நடிகர் விஷ்ணு விஷால் வித்தியாசமான திரைக்கதைகளை தேர்வு செய்து நல்ல நடிப்பை கொடுத்து வருகிறார். ராட்சசன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் சுத்தியல் எல்லாம் வைத்துக் கொண்டு விஷ்ணு விஷாலே சைக்கோ கொலைகாரன் போல இருப்பதை பார்த்த ரசிகர்கள் அடுத்த ராட்சசனா என்கிற கேள்வியை கிளப்பி உள்ளனர்.

கிளைமேக்ஸ் வேற லெவல்

கிளைமேக்ஸ் வேற லெவல்

இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த எஃப்.ஐ.ஆர் திரைப்படம் வெளியாக காலதாமதம் ஆனாலும், படத்தின் மேக்கிங் மற்றும் கடைசியில் வரும் அந்த கிளைமேக்ஸ் ட்விஸ்ட் என படத்தை ரசிகர்கள் பார்த்து வியக்கும் அளவுக்கு இருந்தது. இந்நிலையில், விஷ்ணு விஷாலின் அடுத்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு உடனடியாக மோகன் தாஸ் பட அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.

கைதி கூட்டணி

கைதி கூட்டணி

இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கத்தில் உருவாகி உள்ள மோகன் தாஸ் படத்தின் மிரட்டல் டீசரை கைதி படத்தின் நாயகன் கார்த்தி மற்றும் அந்த படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட இருவரும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். மோகன் தாஸ் டீசரை பார்க்கும் போதே மீண்டும் ஒரு வித்தியாசமான படத்தை விஷ்ணு விஷால் கொடுக்கப் போகிறார் என்கிற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மானை துரத்தும் சிங்கம்

விஷ்ணு விஷால் திரைக்கதையையே ஒரு கதை சொல்வது போல நரேட் செய்கிறார் இந்த டீசரில், சிங்கம் தான் தனக்கு பிடிக்கும் என முதலில் வேண்டாம் என சொன்ன சிங்கத்தையே மீண்டும் கதைக்குள் இங்கி பிங்கி பாங்கி போட்டு கொண்டு வரும் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் எனும் மானை துரத்தி வேட்டையாடப் போவதாக சொல்கிறார். மேலும், ஹீரோவும் நானே வில்லனும் நானே என விஷ்ணு விஷால் சொல்லும் விதமே டீசரில் மிரட்டலாக உள்ளது. கடைசியில், இவ்வளவு நேரம் சொல்லிய கதைக்கு இந்த கதைக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என பயங்கர ட்விஸ்ட் உடன் முடித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X