ஆரம்பமே அலறவிடுதே.. பூஜையுடன் தொடங்கியது விஷ்ணு விஷாலின் 'மோகன்தாஸ்' படப்பிடிப்பு!
சென்னை: விஷ்ணு விஷால் நடிக்கும் மோகன்தாஸ் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷ்ணு விஷால்.
பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ள விஷ்ணு விஷால் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கதா நாயகன், சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட சில படங்களை தயாரித்தும் உள்ளார்.

26ஆம் தேதி ரிலீஸ்
கடைசியாக அவரது நடிப்பில் சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படம் வெளியானது. தொடர்ந்து காடன். ஜகஜால கில்லாடி. எஃப்ஐஆர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் காடன் திரைப்படம் வரும் 26ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

முரளி கார்த்திக் இயக்கம்
இந்நிலையில் விஷ்ணு விஷால் தானே தயாரித்து நடிக்கும் படம் மோகன் தாஸ். இந்தப் படத்தை ஏற்கனவே ஓடிடி பிளாட்ஃபார்முக்காக களவு என்ற படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்குகிறார்.
பூஜையுடன் தொடக்கம்
இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஹீரோயினாக நடிக்கிறார். மலையாள சினிமாவின் பிரபல நடிகரான இந்திரஜித் சுகுமாறன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.
கேக்கை துவம்சம் செய்து
இதில் ஷூட் பிகின்ஸ் டுடே என்று எழுதப்பட்டிருக்கும் கேக்கை சுத்தியலால் அடித்து துவம்சம் செய்வது போல் உள்ளது. இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள விஷ்ணு விஷால், இந்த படத்திற்காக ரொம்ப எக்ஸைட் ஆகியிருப்பதாகவும் இன்று ஆரம்பிக்கிறது என்றும் உங்களின் ஆசிர்வாதம் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











