ரத்தம் தெறிக்கும்.. விஷ்ணு விஷாலின் மோகன்தாஸ்!

சென்னை : விஷ்ணு விஷாலின் கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு மோகன்தாஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

விஷ்ணு விஷாலின் அடுத்த பட தலைப்பு சரியாக 4.07 மணிக்கு டீசராக வெளியாகும் என்று கூறி இருந்தார். அதே போல் இன்று சரியாக 4.07 மணிக்கு இந்த டீசரை நடிகர் விஷ்ணு விஷாலின் தயாரிப்பு நிறுவனமே யூடியூப்பில் வெளியிட்டு இருக்கிறது .

Vishnu vishals next thriller movie mohandoss

இந்த டீசரை விஷ்ணு விஷால் முதலாவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதை கிளிக் செய்து உள்ளே சென்று பார்த்த ரசிகர்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது. டீசரின் ஆரம்பத்தில் மஹாத்மா காந்தி கூறிய வரிகளான ' எதிர்காலம் என்பது இன்று நீ எதை செய்கிறாயோ அதை பொருத்தே நடக்கும் 'என்ற வார்த்தைகளுடன் ஆரம்பிக்கிறது.

இதன்பின் விஷ்ணு விஷால் சுத்தியலுடன் இரத்தம் தெறிக்க தெறிக்க எதையோ அடிக்கிறார் இரத்தம் அங்கும் இங்கும் தெறிக்கிறது. இப்படி இவர் அடிக்கும் நேரத்தில் காந்தியின் வாசகத்திற்கு ஏற்ப ' கண் காது வாய் ' மூடி அமர்ந்திருக்கும் குரங்கு பொம்மைகளையும் காட்டுகிறார்கள். இதே போல் இந்த இடத்தில் அது கிருஸ்டோபரின் சுத்தியல் இல்லை என்பதும் உறுதியாகுகிறது.

Vishnu vishals next thriller movie mohandoss

இதே நேரத்தில் படத்தை ஜி தமிழ் ஒரிஜினலில் 'களவு' என்ற இணைய தொடரை இயக்கிய குழு தான் இந்த படத்தை உருவாக்கியுள்ளதாக காட்டப்படுகிறது. படத்தை முரளி கார்த்திக் எனும் அறிமுக இயக்குனர் இயக்கி வருகிறார். மேலும் சுத்தியலுடன் மாடி ஏறும் விஷ்ணு விஷால் இரத்தத்தை உடம்பில் தடவி சட்டையை வாசிங்க மிஷினில் போடுகிறார். வாஷிங் மெஷின் சுழற படத்தின் தலைப்பு காண்பிக்கப்படுகிறது.

படத்தின் தலைப்பு காந்தியின் முதல் பெயரான ' மோகன் தாஸ்' என்று உறுதியாகுகிறது. இந்த இடத்தில் தலைப்பை கேட்டதில் இருந்து தான் ரசிகர்களுக்கு இன்னும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அதிகரித்தது. இயல்பில் மஹாத்மா காந்தி ஒரு அஹிம்சை விரும்பி ஆனால் இரத்தம் தெரிக்க தெரிக்க எடுக்க படும் இந்த படத்திற்கு ஏன் அவரது பெயர் என்ற பெரிய குழப்பத்தை இந்த டீசர் ரசிகர்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது .

Vishnu vishals next thriller movie mohandoss

பல ரசிகர்கள் நேற்று இரத்ததுடன் சுத்தியலை பார்த்து விட்டு இது ராட்சசன் பட வில்லன் கிருஸ்டோபரின் சுத்தியல் இது அந்த படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறி வந்தனர். ஆனால் டீசர் ஆரம்பத்திலே விஷ்ணு கையில் சுத்தியலை பார்ததும் எல்லாம் மாறி விட்டது. அதன் பின் இந்த மோகன்தாஸ் தலைப்பு என்று அடுக்கடுக்காக சஸ்பென்ஸை கூட்டியிருக்கிறது விஷ்ணு விஷாலின் அடுத்த படம். ஆனால் டீசர் ஏன் 4.07 சரியாக விடபட்டது என்பதை இன்னும் படக்குழு கூறவில்லை. படத்தை 'முரளி கார்த்திக்' என்பவர் இயக்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X