விரைவில் ராட்சசன் 2...விஷ்ணு விஷால் – டைரக்டர் ராம்குமார் கூட்டணி உறுதியானது

சென்னை : முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார் கடந்த ஆண்டு இயக்கிய படம் ராட்சசன். விஷ்ணு விஷால் நடித்த இந்த படம் சூப்பர் ஹிட் படமானது. தற்போது முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளார் ராம்குமார்.

இதற்கிடையில் தனுசை வைத்து படம் ஒன்றை இயக்க, அவரிடம் பேசி உள்ளார் ராம்குமார். இந்த படத்தை முடித்த பிறகு, விஷ்ணு விஷால் உடனான ராட்சசன் 2 படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் ராம்குமார். ஆனால் ஹாலிவுட் படங்களில் தனுஷ் பிஸியாக இருக்கிறார்.

Vishnu Vishals Ratsasan 2 to begin with Ramkumar

ஹாலிவுட் படத்தை முடித்த பிறகு கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார் தனுஷ். இதை முடித்த பிறகே ராம்குமார் படத்தில் தனுஷ் இணைவார் என கூறப்படுகிறது. இதனால் பெயரிடப்படாத இந்த புதிய படத்தின் வேலைகளை ஜூன் மாதத்தில் துவக்க உள்ளார் ராம்குமார்.

ப்ரீ புரொடெக்ஷன் பணிகளில் ராம்குமார் தற்போது ஈடுபட்டு வருகிறார். விரைவில் ராம்குமாருடன் ராட்சசன் 2 படத்தில் இணைய உள்ளதை விஷ்ணு விஷால் சமீபத்தில் அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார். இந்த படத்தை முடித்த பிறகு தனுஷ் படத்தை ராம்குமார் இயக்க போகிறாராம்.

தற்போது ஓப்பந்தமாகி உள்ள படங்களை முடித்த பிறகு 2022 ல் இந்த படத்தை துவக்க திட்டமிட்டுள்ளனர். சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான ராட்சசன் படத்தில் அமலாபால், அம்மு அபிராமி, முனிஷ்காந்த், சரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்தனர். இதற்கு முன் இதே கூட்டணியில் 2014 ல் முண்டாசுப்பட்டி என்ற காமெடி படம் உருவாக்கப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X