ஆத்தாடி என்ன ஒரு ஆவேசம்.. விஷ்ணு விஷால் கன்னத்தில் அப்படியொரு நச்.. ஜுவாலா கட்டாவுக்கு என்னாச்சு?
சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் கன்னத்தில் ஜ்வாலா கட்டா கொடுத்துள்ள ஆவேச முத்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.
Recommended Video
சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடி குழு' படம் மூலம் ஹீரோவானவர், விஷ்ணு விஷால்.
தொடர்ந்து நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன் உட்பட பல படங்களில் நடித்தார். தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

திடீர் விவாகரத்து
இவரும் பிரபல இயக்குனரும் நடிகருமான நட்ராஜின் மகள் ரஜனியை காதலித்து, கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2018 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். இது பரபரப்பானது.

பேட்மின்டன் வீராங்கனை
இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷாலும் பிரபல பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் காதலித்து வருவதாகவும் இரவு விருந்துகளில் இவர்கள் பங்கேற்ற போட்டோக்களும் வெளியாயின. தனது எஃப்ஐஆர் படத்தின் புரமோஷன் தொடர்பாக இருவரும் இணைந்து பேசும் வீடியோ வெளியானது.

முத்தம் கொடுப்பது
முதலில் மறுத்து வந்த அவர்கள் பின்னர் காதலை ஒப்புக்கொண்டனர். அவ்வப்போது இருவரும் சந்தித்துக் கொள்ளும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வந்தனர். கட்டிபிடிப்பது, முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு, தங்கள் காதலை உறுதிப்படுத்தி வந்தனர்.

ஒப்பிடும்போது
நடிகர் சூரி, விஷ்ணு விஷாலின் தந்தை மீது மோசடி புகார் கொத்த போது, சூரியின் பெயரை குறிப்பிடாமல், விஷ்ணுவுக்கு ஆதரவாக பதிவு வெளியிட்டிருந்தார், ஜூவாலா. அதில், பணக்காரர்போல் இருப்பவருடன் ஒப்பிடும்போது மற்றவர் அப்படி இல்லை எனில், சமூகம் அவர்களுக்கு பரிந்து பேச தொடங்கி விடுகிறது. ஏனென்றால் அவர் வாழ்க்கையில் தனது போராட்டம் பற்றியே எப்போதும் பேசுவதால்தான் என்று கூறியிருந்தார்.

மகிழ்ச்சியின் மதிப்பு
இந்நிலையில், இப்போது நடிகர் விஷ்ணு விஷாலின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, முழுமையான மகிழ்ச்சியின் மதிப்பை பெற, அதை யாராவது ஒருவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என அமெரிக்க இலக்கியத்தின் தந்தை எனப்படும் மார்க் ட்வெய்னின் மேற்கோளை குறிப்பிட்டுள்ளார்.

ஏன் போஸ்ட் பண்றீங்க?
இதையடுத்து பல நெட்டிசன்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தாலும் இதை ஏன் வெளிப்படையா போஸ்ட் பண்றீங்க, பெர்சனலா வச்சுக்க வேண்டியதான என்று சிலர் கேட்டுள்ளனர். இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











