கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டத்தை ஆரம்பிக்கும் விஷ்ணு விஷால்.. ஜுவாலா கட்டாவுடன் இப்படி விளையாடுறாரே!

சென்னை: நடிகர் விஷ்ணு விஷால், ஜுவாலா கட்டா இணைந்து பேட்மிண்டன் விளையாடும் வீடியோவை விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ராட்சசன் படத்திற்கு பிறகு தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகள், விவாகரத்து, மதுவுக்கு அடிமையானது, பின்னர் உடற்பயிற்சி மூலம் அதிலிருந்து மீண்டது குறித்து நீண்ட விளக்க வுரை கடிதத்தையும் அதனைத் தொடர்ந்து சிக்ஸ்பேக் டிரான்ஸ்ஃபார்மேஷன் வீடியோவையும் நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் பேட்மிண்டன் விளையாடும் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

டைவர்ஸ்

டைவர்ஸ்

2009ம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான விஷ்ணு விஷால் 2011ம் ஆண்டில் ரஜினி நட்ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2017ம் ஆண்டில் இந்த தம்பதியினருக்கு ஆர்யன் என்ற மகன் பிறந்தார். ஆனால், மகன் பிறந்த ஒரே ஆண்டில் இருவரும் மன முறிவு காரணமாக 2018ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

புதிய நட்பு

புதிய நட்பு

மதுவுக்கு அடிமையாகி வாழ்வில் பல விரக்திகளை அடைந்த நடிகர் விஷ்ணு விஷாலுக்கு, இல்லற வாழ்விலும் பல சிக்கல்கள் தொடர, அது விவாகரத்தில் கொண்டு போய் சேர்த்தது. இந்நிலையில், விஷ்ணு விஷாலுக்கு பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் புதிய நட்பு ஏற்பட்டுள்ளது.

யார் காரணம்

விஷ்ணு விஷால் கடந்த ஆறு மாதத்தில் தீவிர ஜிம் பயிற்சியில் ஈடுபட்டு தற்போது சிக்ஸ்பேக் பாடி வைத்துள்ளார். விஷ்ணு விஷாலின் இந்த திடீர் மாற்றத்திற்கு ஜுவாலா கட்டாதான் காரணமா? என ரசிகர் ஒருவர் நேரடியாக விஷ்ணு விஷாலிடம் ட்விட்டரில் கேள்வி எழுப்ப, அதற்கு விஷ்ணு விஷால் பதில் அளிப்பதற்கு முன்பாக ஜுவாலா கட்டா, அதற்கு விஷ்ணு விஷால் மட்டும் தான் காரணம் என பதிலளித்தார்.

எஃப்.ஐ.ஆர்

மேலும், விஷ்ணு விஷால், தனது புதிய படமான எஃப்.ஐ.ஆர் படத்துக்காகத் தான் இப்படி சிக்ஸ் பேக் வைத்து தனது தோற்றத்தை முற்றிலுமாக மாற்றியுள்ளார் என்ற பேச்சுக்களும் அடிபட்டு வருகின்றன. நாளை எஃப்.ஐ.ஆர் படத்தின் டீசர் ரிலீசாகவுள்ளதாகவும் நேற்று விஷ்ணு விஷால் அறிவித்திருந்தார்.

ஜுவாலா உடன்

இந்நிலையில், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் பேட்மிண்டன் விளையாடும் வீடியோவை நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். ஷர்ட் அணியாமல் விஷ்ணு விஷால் பேட்மிண்டன் விளையாடும் வீடியோ கோலிவுட்டில் பல கிசுகிசுக்களுக்கு வித்திட்டு வருகிறது. ட்விட்டரிலும் சில நெட்டிசன்ஸ், இவங்க தான் உங்க கதையோட ரம்யாவா? என்றும் சட்டை அணிந்து விளையாடலாமே என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X