அச்சு அசல்.. அப்படியே அப்பாவை போல.. விஷ்ணு விஷால் போட்ட ரியல் vs ரீல் ட்வீட்!
சென்னை: விஷ்ணு விஷாலின் ராட்சசன் லுக் அப்படியே அவரது அப்பாவை உரித்தது வைத்தது போல இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
Recommended Video
சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால்.
சினிமா வாழ்க்கையை போலவே, தனது நிஜ வாழ்விலும் பல ஏற்ற இறக்கங்களையும் சந்தித்து வருகிறார்.

போலீஸ் அதிகாரி
ராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடிகர் விஷ்ணு விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். ஆனால், அவரது தந்தை ரமேஷ் குடவாலா உண்மையிலேயே தமிழ் நாட்டின் டாப் ரேங்கிங் போலீஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையை பல தருணங்களில் நடிகர் விஷ்ணு விஷால் இன்ஸ்பயராக கொண்டு, கடினமான காலங்களை கடந்துள்ளார்.

தனிமையில்
இந்த லாக்டவுனில் செல்ல மகன் ஆர்யானையும் சந்திக்க முடியாமல், வருங்கால மனைவியான காதலி ஜூவாலா கட்டாவையும் சந்திக்க முடியாமல் தனிமையில் வாடி வருகிறார் விஷ்ணு விஷால். வொர்க்கவுட் செய்து ஏற்றிய சிக்ஸ்பேக் உடம்பெல்லாம் இந்த கொரோனா லாக்டவுனில் வீணாக போய்விடுமோ என்ற சிந்தனையிலும் இருக்கிறார்.

ராட்சசன் நினைவுகள்
கடைசியாக 2018ம் ஆண்டு ராம்குமார் இயக்கத்தில் வெளியான ராட்சசன் பட நினைவுகளில் மூழ்கியுள்ள விஷ்ணு விஷால், இதுதான் நான் என அவ்வப்போது தனது ரசிகர்கள் மறந்திடாத வண்ணம் நினைவு கூர்ந்து நினைவு படுத்தி வருகிறார். ராட்சசன் பட ஷூட்டிங்கில் அமலா பால் மற்றும் சிம்புவுடன் எடுத்த புகைப்படங்களையும் சமீபத்தில் பகிர்ந்திருந்தார்.

அச்சு அசல்
இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால், ரியல் வெர்சஸ் ரீல் எனும் கேப்ஷனுடன் தனது அப்பா போட்டோ மற்றும் ராட்சசன் கெட்டப் போட்டோ இரண்டையுமே ஒப்பீடு செய்து ட்வீட் போட்டிருக்கிறார். அந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள், அப்படியே அச்சு அசலாக உங்க அப்பா போலவே இருக்கீங்க என வாயாற பாராட்டி வருகின்றனர்.

வித்தியாசம் இருக்கு
இந்த இரண்டு புகைப்படங்களுக்கு நடுவே கருப்பு / வெள்ளை மட்டுமே வித்தியாசமாக இருக்கிறது. மற்றபடி நீங்க அப்படியே உங்க அப்பா சாயலில் தான் இருக்கீங்க, அவர் நிச்சயம் உங்களை நினைச்சு பெருமைபடுவாரு, அடுத்ததாக உங்கள் நடிப்பில் வரவிருக்கும் எஃப்.ஐ.ஆர்., காடன் மற்றும் மோகன் தாஸ் படங்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











