2 வருஷமா முயற்சி பண்ணியும் நல்ல கதை செட் ஆகல.. தம்பியை ஹீரோவாக்க பிளான் பண்ணும் விஷ்ணு விஷால்!

சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் வித்தியாசமான கதைகளில் நடித்து தனக்கான ஒரு தனி ரசிகர் வட்டாரத்தை வைத்திருக்கிறார்.

கடந்த ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எஃப்.ஐ.ஆர் மற்றும் கட்டா குஸ்தி என இரண்டு படங்களுமே அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பரிசளித்தன.

இந்நிலையில், விரைவில் தனது தம்பி ருத்ராவை சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்த பெரும் முயற்சிகளை செய்து வருகிறாராம் விஷ்ணு விஷால் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிப்பும் தயாரிப்பும்

நடிப்பும் தயாரிப்பும்

ராட்சசன் வெற்றிக்கு பிறகு விஷ்ணு விஷாலின் ரேஞ்சே மாறிடும் என அவரே எதிர்பார்த்த நிலையில், குடும்பத்தில் நடந்த விவாகரத்து பிரச்சனை காரணமாக அத்தனையும் வீணாய் போனதாக அவரே கம்பேக் கொடுத்த வீடியோவில் குறிப்பிட்டு இருந்தார். தயாரிப்பாளர்கள் சரியாக சம்பளம் தருவதில்லை என்கிற குற்றச்சாட்டை முன் வைத்த விஷ்ணு விஷால் தனியாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கி தனது படங்களை உருவாக்கி வருகிறார்.

டபுள் டமாக்கா வெற்றி

டபுள் டமாக்கா வெற்றி

இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியான எஃப்ஐஆர் திரைப்படம் விஷ்ணு விஷாலுக்கு ராட்சசன் படத்திற்கு பிறகு சரியான கம்பேக் படமாகவே அமைந்தது. தியேட்டர் மற்றும் ஓடிடி என ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை அந்த படம் பெற்றது. கடந்த ஆண்டு இறுதியில் செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி படமும் விஷ்ணு விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்தது.

கட்டா குஸ்தி 2வுக்கும் பிளான்

கட்டா குஸ்தி 2வுக்கும் பிளான்

மோகன்தாஸ் படம் மட்டும் இன்னும் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடக்கிறது. கட்டா குஸ்தி வெற்றியை தொடர்ந்து கட்டா குஸ்தி 2 படத்திலும் நடிக்க விஷ்ணு விஷால் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், தனது தம்பியை சினிமாவுக்கு கொண்டு வரவும் தீவிர முயற்சியில் விஷ்ணு விஷால் இறங்கி உள்ளாராம்.

லால் சலாம்

லால் சலாம்

அதற்கு நடுவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். விக்ராந்த்தும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் உடன் இணைந்து நடித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்பெஷல் கேமியோ ரோலில் படத்தில் நடிக்க உள்ளார்.

ஹீரோவாகும் விஷ்ணு விஷால் தம்பி

ஹீரோவாகும் விஷ்ணு விஷால் தம்பி

நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா தற்போது சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஃபுல் ஃபார்மில் ரெடியாகி உள்ளார் என்றும் அவர் நடிக்க உள்ள படத்திற்கான கதைகளை விஷ்ணு விஷால் கேட்டு வருவதாகவும் கூடிய சீக்கிரத்தில் பெரிய அப்டேட் வெளியாக உள்ளதாக கூறுகின்றனர்.

2 ஆண்டுகளாக

2 ஆண்டுகளாக

தனது தம்பி ருத்ராவை ஹீரோவாக ஆக்கப் போறேன் என கடந்த 2021ம் ஆண்டே அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டாகிராமில் விஷ்ணு விஷால் அறிவித்து இருந்தார். ஆனால், 2 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் அவருக்கான கதை மற்றும் இயக்குநர் செட் ஆகவில்லை எனக் கூறுகின்றனர். இந்நிலையில், கட்டா குஸ்தி படத்தை இயக்கிய செல்லா அய்யாவுவை வைத்தே தம்பிக்கு ஒரு படத்தை ரெடி செய்ய முடிவு செய்து இருப்பதாக கூறுகின்றனர்.

தனுஷ் படம்

தனுஷ் படம்

கட்டா குஸ்தி படத்தை பார்த்து அசந்துப் போன நடிகர் தனுஷ் ஏற்கனவே கேப்டன் மில்லர் படத்துக்கு பிறகு செல்லா அய்யாவு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் செய்து வைத்திருப்பதாகவும் கூறுகின்றனர். இதனால், ருத்ராவை இயக்கப் போகும் இயக்குநர் யார் என்பதில் சற்றே சிக்கல் நிலவி வருவதாகவும் கூடிய விரைவில் அப்டேட் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

படையெடுக்கும் தம்பிகள்

படையெடுக்கும் தம்பிகள்

செல்வராகவனின் தம்பி தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஹீரோவானார். மோகன் ராஜா தம்பி ஜெயம் ரவி ஜெயம் படத்தில் அறிமுகமானார். சூர்யா தம்பி கார்த்தி பருத்தி வீரன் படத்தில் பட்டையை கிளப்பினார். இப்படி தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட தம்பிகள் கெத்துக் காட்டி வருகின்றனர். அதர்வாவின் தம்பியும் ஹீரோவாக உள்ள நிலையில், அடுத்து அந்த வரிசையில் விஷ்ணு விஷால் தம்பியும் அறிமுகமாக உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X