சினிமா சிம்புவின் விரல் நுனியில் இருக்கும்.. கிரிக்கெட்டர் அஸ்வினிடம் மனம் திறந்த விஷ்ணு விஷால்!

சென்னை: சினிமா சிம்புவின் விரல் நுனியில் இருக்கும் என கிரிக்கெட்டர் அஸ்வினிடம் நேற்று நேரலையில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால் கூறியிருந்தது சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது.

இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் நடத்தும் DRS with Ash என்ற பேட்டி நிகழ்ச்சியில் பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.

இந்த லாக்டவுனில் வீட்டில் இருக்கும் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆங்கராக மாறி பேட்டிகளை எடுத்து வருகிறார்.

விஷால்னு தான் கூப்டுவேன்

விஷால்னு தான் கூப்டுவேன்

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் நடத்தும் பேட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது சினிமா அனுபவங்களை விஷ்ணு விஷால் பகிர்ந்து கொண்டார். பேட்டியின் தொடக்கத்திலேயே விஷால் என அவரை அழைத்த அஸ்வின், அதற்கு விளக்கமாக, சின்ன வயசுல இருந்தே அவன விஷால் என கூப்பிட்டுத் தான் பழக்கம். ரசிகர்கள் கன்ஃப்யூஸ் ஆக வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

என் டீம் கேப்டன்

என் டீம் கேப்டன்

மேலும், அந்த பேட்டியில், விஷ்ணு விஷால், என்னோட அணியின் கிரிக்கெட் கேப்டனாக இருந்தார் என்ற ரகசியத்தையும் பகிர்ந்து கொண்டார் அஸ்வின். எனக்கு முன்னால் அவன் தான் கிரிக்கெட் வீரராக மாறுவான், நான் அவனுக்கு பின்னால் அணியில் சேரலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால், விதி விளையாடி விட்டது என்று பேசியுள்ளார்.

கடலில் விடப்பட்டேன்

கடலில் விடப்பட்டேன்

கிரிக்கெட்டை தான் விட வில்லை என்றும், கிரிக்கெட் தன்னை விட்டு விட்டது என்றும் ஃபீல் பண்ண விஷ்ணு விஷால், சினிமாவும் தனக்கு ஆரம்பத்தில் செட் ஆகாமல், ஒரு ஐடி கம்பெனியில் டெஸ்க் ஜாபில் போய் அமர்ந்தேன். மீண்டும் சினிமா வாய்ப்பு வர கடலில் நீச்சலே தெரியாமல் விழுந்த ஒருவன், உயிருக்கு போராட என்ன செய்வானோ அதை தான் செய்தேன் எனக் கூறியிருக்கிறார்.

விரல் நுனியில் சினிமா

விரல் நுனியில் சினிமா

தமிழ் சினிமாவில் தான் நடிக்க வந்த போது, தனக்கு கிடைத்த முதல் மற்றும் ஒரே சினிமா நண்பன் சிம்பு மட்டும் தான். எப்பொதுமே ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டாகவும், நேர்மையாகவும் இருப்பவர். அவரது விரல் நுனியில் சினிமா இருக்கும். கதாநாயகன் ஷூட்டிங்கின் போது அவரது குரல் தேவைப்பட்டது. அப்போது அவரிடம் பேசும் போது நிறைய கற்றுக் கொண்டேன். இன்னும் கூட எங்கள் நட்பு தொடர்கிறது என சிம்பு குறித்தும் அந்த பேட்டியில் விஷ்ணு விஷால், பேச, அந்த பேட்டியை சிம்பு ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

கத்துக்க நிறைய இருக்கு

கத்துக்க நிறைய இருக்கு

ராட்சசன் படம் பண்ணும் போது தான், இனிமே தப்பிப்பதற்காக கை கால்களை கடலில் இஷ்டத்துக்கு அடிக்க வேண்டாம், கரையை நோக்கி நகர நீந்துவோம் என்ற உணர்வே தனக்கு வந்ததாகவும், இன்னும் சினிமாவிலும் வாழ்விலும் கற்றுக் கொள்ள பல விஷயங்கள் இருப்பதாகவும் விஷ்ணு விஷால் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X