டாட்டூல என்ன அந்த எழுத்து இருக்கு.. முதல் பொண்டாட்டிக்காகவா? விஷ்ணு விஷாலை விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகர் விஷ்ணு விஷாலின் டாட்டூவை பார்த்த நெட்டிசன்கள் அதற்கு அர்த்தம் என்ன என கேட்டு வருகின்றனர்.

நடிகர் விஷ்ணு விஷால் தனது நீண்ட நாள் காதலியான ஜூவாலா கட்டாவை நேற்று திருமணம் செய்தார்.

அவர்களின் திருமண போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. புதிதாய் திருமணம் ஆன ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மகன் ஆர்யன்

மகன் ஆர்யன்

ஏற்கனவே தன்னுடன் கல்லூரியில் படித்த ரஜினி நட்ராஜ் என்பவரை கடந்த 2010ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார் விஷ்ணு விஷால். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார்.

மனைவி விவாகரத்து

மனைவி விவாகரத்து

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2018ஆம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்தார். மகன் ஆர்யன் அம்மாவிடம் வளர்ந்து வருகிறார்.

நைட் பார்ட்டிகளில்..

நைட் பார்ட்டிகளில்..

விஷ்ணு விஷால் மனைவியை பிரிந்ததற்கு காரணம் பேட்மிண்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டாவுடன் ஏற்பட்ட பழக்கமே என கூறப்பட்டது. இருவரும் நைட் பார்ட்டிகளில் நெருக்கமாக பங்கேற்ற போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வெளியானது.

திருமணத்திற்கு முன்பே

திருமணத்திற்கு முன்பே

ஒரு கட்டத்தில் காதலை ஒப்புக்கொண்ட விஷ்ணு விஷால், மனைவி சந்தேகப்பட்டதால் வாழ்க்கையே வெறுத்ததாக குற்றம்சாட்டினார். ஜூவாலாவுடனான காதலை உறுதிப்படுத்திய விஷ்ணு விஷால் திருமணத்திற்கு முன்பே அவருடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றார்.

கையில் டாட்டூ..

கையில் டாட்டூ..

அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் திருமணம் முடித்த கையோடு தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். அதாவது தனது கையில் வரைந்துள்ள டாட்டூவை காட்டியுள்ளார்.

முதல் மனைவி மகன்

முதல் மனைவி மகன்

அதில் ஆங்கில எழுத்தான A மற்றும் R ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போட்டோவை பகிர்ந்துள்ள விஷ்ணு விஷால் லைஃப் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், R என முதல் மனைவியான ரஜினியையும் A என மகன் ஆர்யனையும் குறிப்பிட்டு வரைந்துள்ளீர்களா என கேட்டுள்ளனர்.

மனசாட்சியே இல்லையா?

மனசாட்சியே இல்லையா?

இன்னும் சிலர் ஏஆர் ரஹ்மானின் ரசிகரா நீங்கள் என்றும் கேட்டு வருகின்றனர். மேலும் என்ன அவென்சர்ஸ் லோகோவை வரைந்துள்ளீர்கள் என்றும் கேட்டு வருகின்றனர். மகனையும் மனைவியையும் விட்டுவிட்டு திருமணம் செய்துள்ளீர்களே உங்களுக்கு மனசாட்சியே இல்லையா என்றும் விளாசி வருகின்றனர்.

மரியாதையை இழந்துவிட்டீர்கள்

மரியாதையை இழந்துவிட்டீர்கள்

மேலும் நீங்கள் மூன்றாவதாக ஒரு திருமணம் செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் மக்கள் மற்றும் உங்கள் மகனின் மரியாதையை இழந்து விட்டீர்கள் என்றும் திட்டியுள்ளனர். அதேநேரத்தில் பலரும் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்றும் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X