Bharat: இந்தியாவை பாரத்னு மாத்தினா பொருளாதாரம் உயரப் போகுதா?.. விஷ்ணு விஷால் கேட்ட கேள்வி!

சென்னை: இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என பாஜக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றிவிட்டால் நாடு வளர்ச்சி அடையுமா அல்லது நாட்டின் பொருளாதாரம் உயர்ந்து விடுமா என விஷ்ணு விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து ஏகப்பட்ட அரசியல் நகர்வுகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநில கட்சிகளுடன் அமைத்த கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்து மாஸ் காட்டியது.

Vishnu Vishal tweet asks, how does this Bharat name change help Indias progress and its economy?

பாரத் பெயர் பிரச்சனை: இந்தியாவை பாஜக வீழ்த்துமா என்கிற பிரச்சாரம் எழுந்த நிலையில் இது இந்தியாவிற்கு இந்தியா என்ற பெயரை மாற்றி விட்டு பாரத் என்னும் பெயரை வைக்கும் முடிவுக்கு பாஜக அரசு வந்துள்ளது. இந்த முடிவுக்கு ஏகப்பட்ட கட்சிகள் மற்றும் பிரபலங்கள் தங்களின் கருத்துக்களையும் எதிர்ப்புகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர் சேவாக் இந்திய அணிக்கு பாரத் அணி என்ற பெயரை மாற்ற வேண்டும் என தனது கருத்தை முன்வைத்த நிலையில் நெட்டிசன்கள் அவரை சமூக வலைதளங்களில் பிளந்து கட்டி வருகின்றனர்.

விஷ்ணு விஷால் கேள்வி: இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஹீரோவாக லால் சலாம் படத்தில் நடித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கொண்டே இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றினால் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்கிற கேள்வியை உள்ளார்.

பாரத தேசம் என்பதுதான் இந்தியாவாக மாறியது என்றும் இந்தியா எப்போதுமே பாரத நாடு என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை அப்படி இருக்க திடீரென இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்று வேண்டும் சிந்தனை எங்கிருந்து தோன்றியது என்பதை வேடிக்கையாக உள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் பதிவிட்டுள்ளார்.

Vishnu Vishal tweet asks, how does this Bharat name change help Indias progress and its economy?

மனைவி போட்ட கமெண்ட்: இந்தியாவை பாரத் என மாற்றினால் எந்த ஒரு பலனும் இல்லை என்பது போலவே இந்தியாவை பாரத் என மாற்றுவதால் எந்தவித பாதகமும் இல்லையே என நெட்டிசன் ஒருவர் கமெண்ட்ஸ் போட்ட நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி ஜுவாலா கட்டா நாட்டில் உள்ள உண்மையான பிரச்சனைகளுக்கான தீர்வுகளை பார்க்காமல் ஏற்ற நேரத்தை பெயர் மாற்றம் செய்வதற்காக செலவிடாமல் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்தியா என்கிற பெயரே வேண்டும் என்றும் பாரத் என மாற்றம் செய்யத் தேவையில்லை என்றும் தனது கருத்தை முன் வைத்துள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது மனைவி ஜுவாலா கட்டாவின் கருத்துக்கு ஆதரவுகளும் சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X