விரக்தியில் விஷ்ணு விஷால்... லால் சலாம் படத்தில் இருந்து வெளியேறினாரா... ரசிகர்களை குழப்பும் ட்வீட்

சென்னை: கிரிக்கெட் பிளேயர் கனவுடன் பயணித்த விஷ்ணு விஷால், தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

கடந்தாண்டு வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் விஷ்ணு விஷாலுக்கு சிறப்பான கம்பேக் கொடுத்தது.

தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஷ்ணு விஷால் மிகவும் விரக்தியாக ட்வீட் செய்துள்ளது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடங்கியது லால் சலாம்

தொடங்கியது லால் சலாம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கிரிக்கெட் வீரர்களாக நடிக்கின்றனர். இருவருமே ப்ரோபஷனலாக கிரிக்கெட் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதும் குறிப்பிடத்தக்கது. லைகா, ஏஆர் ரஹ்மான் என பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகும் லால் சலாம் ஸ்போர்ட்ஸ் ஜானர் படமாக தயாராகிறது.

விஷ்ணு விஷால் ட்வீட்

விஷ்ணு விஷால் ட்வீட்

இந்நிலையில், விஷ்ணு விஷாலின் ட்வீட் ரசிகர்களிடம் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன், கட்டா குஸ்தி என வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். அந்த வரிசையில் லால் சலாம் அவரது கேரியரில் பெஸ்ட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அடுத்தடுத்து அவர் விரக்தியாக டிவிட்டரில் பதிவிட்டு வருவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது மறக்க முடியாத துரோகம்

இது மறக்க முடியாத துரோகம்

கட்டா குஸ்தி படத்தின் மாஸ் ஹிட்டுக்குப் பின்னர் கம்பீரமாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான், விஷ்ணு விஷால் விரக்தியில் ட்வீட் செய்து வருகிறார். தற்போது அவரது டிவிட்டரில், "Its ok, I tried again, I failed again, I learnt again" என குறிப்பிட்டுள்ளார். அதாவது இது போதும், மீண்டும் சோர்ந்துவிட்டேன், மீண்டும் தோற்றுவிட்டேன், மீண்டும் கற்றுக்கொண்டேன்" எனக் கூறியுள்ளார். மேலும், "இதுவே கடைசி தோல்வியாக இருக்கட்டும், ஆனாலும் இது துரோகம், ஏமாற்றம் தான்" என பதிவிட்டுள்ளார்.

எந்தப் படம் ட்ராப்?

எந்தப் படம் ட்ராப்?

விஷ்ணு விஷாலின் இந்த டிவிட்டர் பதிவைப் பார்த்த ரசிகர்கள், எந்த படம் ட்ராப் ஆனது என கேட்டு வருகின்றனர். ஏற்கனவே பலமுறை லால் சலாம் படத்தில் இருந்து விஷ்ணு விஷால் வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளியாகின. சில தினங்களுக்கு முன்னர், "You got to stand for your own self.. No one will....." என்கிற கேப்ஷனுடன் தனது புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இப்போது மீண்டும் மீண்டும் தோல்வி, துரோகம் என்ற ரீதியில் ட்வீட் செய்துள்ளார். இதனால் லால் சலாம் படத்தில் இருந்து விஷ்ணு விஷால் விலகினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ட்வீட்டை டெலிட் செய்த விஷ்ணு விஷால்

ட்வீட்டை டெலிட் செய்த விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷாலின் டிவிட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஒருபக்கம் லால் சலாம் படத்தில் இருந்து விலகினாரா என ட்ரெண்ட் ஆனது. அதேநேரம் விஷ்ணு விஷாலுக்கும் ஜுவாலா கட்டாவுக்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் கூட முடியாத நிலையில், அவர்கள் விவாகரத்து செய்துகொள்ள போகிறார்களா என்றும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்யத் தொடங்கிவிட்டனர். இதனால் உடனடியாக தனது டிவிட்டர் பதிவை டெலிட் செய்துள்ளார் விஷ்ணு விஷால்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X