விஷ்ணு விஷால், ஜுவாலா கட்டா திருமண வீடியோ… திரைப்பிரபலங்கள் வாழ்த்து !
ஹைதராபாத் : விஷ்ணு விஷால், ஜுவாலா கட்டா திருமணம் ஹைதராபாத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
திருமண வீடியோ மற்றும் புகைப்படத்தை ஜுவாலா கட்டா தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த ஜோடிக்கு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ராட்சசன் வெற்றி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

விவகாரத்து பெற்றார்
2011 ஆம் ஆண்டு ஆண்டு விஷ்ணு விஷால், ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

மோதிரம் மாற்றி
இந்த நிலையில் கடந்த ஆண்டு பேட்மிட்டன் வீராங்கனையான ஜுவாலாவை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்து இருந்தார். மோதிரத்தை மாற்றி நிச்சயதார்த்தம் செய்து தங்களது காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதாக கூறியிருந்தார். அதன்படி கடந்த வாரம் தனது அழைப்பிதழை இணையத்தில் பகிர்ந்து ஏப்ரல் 22ந் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக கூறியிருந்தார்.
Snapshots from Guttajwala & TheVishnuVishal's fairytale wedding ✨💖🥰 #JwalaGutta #VishnuVishal #Badminton #Kollywood #Tollywood #CoupleGoals #JwalaVished pic.twitter.com/9QpfxhD522
— Hyderabad Times (HydTimes) April 22, 2021
ரசிகர்கள் வாழ்த்து
இந்நிலையில், ஹைதராபாத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா கட்டா திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. திருமண புகைப்படங்கள் வீடியோக்களை ஜுவாலா கட்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார். இந்த ஜோடிக்கு திரைப்பிரபலங்கள் மட்டுமின்று ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











