விடிவெள்ளி முளைக்கும் வரை இருள் ஆட்சியில் இருக்குமடா.. உதயநிதியை வாழ்த்திய புது மாப்பிள்ளை!

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக அமோக வெற்றிப் பெற்று ஆட்சியமைத்து உள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்தி உள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற உதயநிதி ஸ்டாலினை தொடர்ந்து ஏகப்பட்ட திரைப் பிரபலங்கள் சந்தித்து வாழ்த்தி வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களுடன் விஷ்ணு விஷால் தற்போது பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

சாதனை படைத்த உதயநிதி

சாதனை படைத்த உதயநிதி

தாத்தா, அப்பாவை போலவே தானும் அரசியலில் வெற்றிப் பெறுவேன் என்பதை முதல் முயற்சியிலேயே நிரூபித்துக் காட்டி உள்ளார் உதயநிதி ஸ்டாலின். சேப்பாக்கம் தொகுதியில் பெரு வெற்றிப் பெற்ற உதயநிதி ஸ்டாலினை தொடர்ந்து ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் நேரில் சந்தித்தும் சமூக வலைதளங்களில் பதிவுகளை போட்டும் வாழ்த்தி வருகின்றனர்.

புது மாப்பிள்ளை

புது மாப்பிள்ளை

சமீபத்தில் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை திருமணம் செய்து கொண்ட புது மாப்பிள்ளை விஷ்ணு விஷால் திமுக வெற்றிப்பெற்று மீண்டும் தமிழகத்தை ஆட்சி செய்வதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். தனது நண்பரான உதயநிதி ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்தும் வாழ்த்தி உள்ளார்.

இருளுக்கு முடிவுண்டு

இருளுக்கு முடிவுண்டு

"விடிவெள்ளி தான் முளைக்கும் வரை இருள் மட்டும் ஆட்சியில் இருக்குமடா, கிழக்கு முகம் வெளுத்ததனால் இருளுக்கு முடிவுண்டு எங்களுக்கு விடிவுண்டு" என தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த போது எடுத்துக் கொண்ட போட்டோக்களை ஷேர் செய்து உதயநிதி ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இருள் ஆட்சி

இருள் ஆட்சி

திமுக வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், கடந்த அதிமுக ஆட்சி இருள் ஆட்சி என்பதை வெளிப்படையாகவே நடிகர் விஷ்ணு விஷால் விமர்சித்துள்ளார். நடிகர் விஷ்ணு விஷாலின் இந்த ட்வீட்டை பார்த்த திமுகவினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் இவரது இந்த ட்வீட்டால் அதிமுகவினர் அப்செட் ஆகி நடிகர் விஷ்ணு விஷாலை ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X