பாரத் பெயருக்கு எதிரான விஷ்ணு விஷாலின் குரல்.. எல்லாம் ரெட் ஜெயண்ட்தான் காரணம்.. ப்ளூ சட்டை மாறன் ட்வீட்

சென்னை: Bharat (பாரத்) இந்தியாவுக்கு ஏன் பாரத் என்று பெயர் மாற்ற வேண்டும் என விஷ்ணு விஷால் நேற்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டணிக்கு INDIA என்று பெயர் வைத்திருக்கிறது. ஒரு நாட்டின் பெயரை எப்படி தேர்தல் கூட்டணிக்கு வைக்கலாம் என பாஜக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. அதுமட்டுமின்றி எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு INDIA என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதால் அதனை மத்தியில் இருக்கும் பாஜக அரசு பயன்படுத்தாமல் தவிர்த்துவருகிறது.

Vishnu Vishals voice against the name of Bharat Red Giant Movies is the reason Blue Sattai Maran Tweet

பாரத்தின் குடியரசுத் தலைவர்: சூழல் இப்படி ஜி 20 உச்சி மாநாட்டுக்கான அழைப்பிதழில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக குடியரசுத் தலைவர் பாரத் என்று அச்சிடப்பட்டிருக்கிறது. மேலும் நடைபெறவிருக்கும் மக்களவை கூட்டத்தொடரில் இதுதொடர்பான மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தேசிய அளவில் பெரும் விவாதத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக வந்து தற்போது நாட்டின் பெயரையே மாற்றும் அளவுக்கு மத்திய அரசு வந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கொந்தளித்துவருகின்றனர்.

சேவாக்: சூழல் இப்படி இருக்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சேவாக் இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும்படி இருக்க வேண்டும் என்பதில் நான் நம்பிக்கையோடு இருப்பவன். நாம் பாரதியர்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர். எங்களது உண்மையான பெயரான பாரத் என்பதை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது. இந்த உலகக்கோப்பை தொடரில் நமது வீரர்கள் ஜெர்ஸியில் பாரத்தை ஏந்தியிருப்பதை பிசிசிஐயும், ஜெய் ஷாவும் உறுதி செய்ய வேண்டும்" என குறிப்பிட்டார்.

விஷ்ணு விஷால் பதிலடி: சேவாக்கின் இந்த ட்வீட்டுக்கு நடிகர் விஷ்ணு விஷால், "இத்தனை நாட்கள் இந்தியா என்பது பெருமை அளிக்கவில்லையா" என கேள்வி கேட்டு பதிலடி கொடுத்தார். மேலும் மற்றொரு ட்வீட்டில், "நாட்டின் பெயரை மாற்றுவது எப்பது பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். இது விசித்திரமாக இருக்கிறது. நம் நாட்டை இந்தியா மற்றும் பாரத் என்று அறிவோம். இப்போது மட்டும் ஏன் இந்தியா என்ற பெயரை துறக்க வேண்டும்" என்றும் கேள்வி எழுப்பினார். அவரது இந்த ட்வீட் இணையத்தில் ட்ரெண்டானது.

ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: இந்நிலையில் பலரையும் வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன் இந்த விவகாரத்தில் விஷ்ணு விஷாலையும் வம்பிழுத்திருக்கிறார். அவர் விஷ்ணு விஷால் கூறியதை குறிப்பிட்டு தனது எக்ஸ் பக்கத்தில், "விஷ்ணு விஷாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம், எஃப் ஐ ஆர், கட்டா குஸ்தி ஆகிய படங்களை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் உதயநிதி ஸ்டாலினுக்காகத்தான் இந்த குரலை விஷ்ணு விஷால் வெளிப்படுத்தியிருக்கிறார் என ப்ளூ சட்டை மாறன் மறைமுகமாக கூறுவதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X